தினமலர் அலுவலம் மீது பாமக பயங்கர தாக்குதல்
கடலூர்:
கடலூரில் தினமலர் பத்திரிக்கை அலுவலகத்தின் மீது பா.ம.கவினர் பயங்கர தாக்குதல் நடத்தினர்.பத்திரிக்கை அலுவலகத்தை சூறையாடியதோடு, ஊழியர்களையும் தாக்கினர். இதில் இருவர்காயமடைந்தனர்.
தினமலர், பா.ம.க இடையே நீண்ட நாட்களாகவே மோதல் நடந்து வருகிறது. தங்களை தினமலர்மிகக் கடுமையாக விமர்சித்து வருவதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல முறைபத்திரிக்கையாளர் சந்திப்புகளிலேயே பாய்ச்சல் காட்டியுள்ளார்.
தினமலர் நிருபர் கேள்வி கேட்டாலே, ஏட்டிக்குப் போட்டியாகவே பதில் தருவார் ராமதாஸ்.
இந் நிலையில் இன்று கடலூர் தினமலர் அலுவலகத்தின் மீது பா.ம.கவினர் பயங்கர தாக்குதல்நடத்தினர். இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளுடன் காரில் வந்த 6 பா.ம.கவினரும் தங்களைசரமாரியாகத் தாக்கியதாக ஊழியர்களில் ஒருவரான வீரகுமார் காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.
அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், டெலிபோன்கள், நாற்காலிகளை அடித்து உடைத்த 6பேரும் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
தாக்குதல் நடந்தபோது 10 பேர் அலுவலகத்தில் இருந்ததாகவும் 8 பேர் தப்பி வெளியில் ஓடிவந்துவிட்டதாகவும், இருவருக்கு சிறிது காயம் ஏற்பட்டதாகவும் வீரகுமார் தனது புகாரில்கூறியுள்ளார்.
கடலூர் அலுவலகத்தில் இருந்து தான் தினமலரின் பாண்டிச்சேரி பதிப்பு தயாராகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications