சுயாட்சி: புலிகளுடன் பேச தயார்- ஜே.வி.பி.
கொழும்பு:
ஆளும் கட்சி கூட்டணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிலகியுள்ளார்.
சந்திரிகாவின் சுதந்திரக் கட்சிக்கு ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சி ஆதரவு அளித்து வருகிறது.இக்கூட்டணியின் தலைவராக சந்திரிகா செயல்பட்டு வந்தார். விடுதலைப் புலிகளின் சுயாட்சி உரிமைகோரிக்கைக்கு ஜனதா விமுக்தி பெரமுன எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இக்கோரிக்கையின் அடிப்படையில் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த சந்திரிகா முற்பட்டால்,ஆளும் கூட்டணிக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுன கூறிவருகிறது.
இதன் காரணமாக சந்திரிகாவுக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துவந்த நிலையில், கூட்டணித் தலைமைப் பொறுப்பிலிருந்து சந்திரிகா விலகிவிட்டார். வேலைப்பளு காரணமாகசந்திரிகா விலகிவிட்டதாக அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டணியின் புதிய தலைவராக சந்திரிகாவின் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர்நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஜேவிபி பல்டி:
கூட்டணி தலைவர் பதவியில் இருந்து சந்திரிகா விலகியுள்ள நிலையில், புலிகளின் சுயாட்சி உரிமைகோரிக்கையை ஏற்பதாக ஜனதா விமுக்தி பெரமுன தலைவர்களில் ஒருவரான திசநாயகே கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காலத்தின் தேவைகளை ஒவ்வொரு அரசும் ஏற்றுக்கொள்வது அவசியமாகும். எனவேதான் சுயாட்சி என்றகோரிக்கையின் அடிப்படையில் சந்திரிகாவுடன் இணைந்து புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தமுன்வந்துள்ளோம்.
நாங்கள் விரும்புவது என்னவென்றால் இடைக்கால நிர்வாகத்தை அமைத்து, அதன் வழியே இறுதி ஒப்பந்தம்எட்டப்பட வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடரும் வகையில், விடுதலைப் புலிகள் தங்களுக்குஎதிரானவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கைவிட வேண்டும் என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்வு எட்டப்பட்ட பின்பு தான் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படவேண்டும் என்று இதுவரை ஜனதா விமுக்தி பெரமுனா கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications