வீராணம் பகுதி பாலைவனம் ஆகும் அபாயம்: ராமதாஸ்
சென்னை:
புதி வீராணம் திட்டத்தால் அப்பகுதியே பாலைவனம் ஆகும் அபாயம் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வீராணம் திட்டத்தின்படி, ஏரியின் உபரி நீர் மட்டுமே சென்னைக்கு வர வேண்டும். தற்போது, வரும் 7.5 கோடிலிட்டர் தண்ணீரும் வீராணம் நீர் இல்லை. காரணம் வீராணம் ஏரியில் தற்போது தண்ணீரே இல்லை.
வீராணம் திட்டத்தால் அப்பகுதியில் விவசாயத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.ஆனால், தற்போது வீராணம் பகுதியே பாலைவனம் ஆகும் வகையில், 1,000 அடி ஆழத்துக்கு 42 ராட்சதஆழ்குழாய்க் கிணறுகள் போடப்பட்டுள்ளன.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் வீராணம் திட்டத்துக்கு அவசியம் இல்லை.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் மிகவும் மலிவானது. ஒரு லிட்டர் தண்ணீரை 5 பைசாவுக்குப் பெற முடியும் என்றுமத்திய அரசின் அணுசக்தித் துறைச் செயலரும் அணுசக்தி ஆணையத் தலைவருமான அனில் ககோட்கர்கூறியிருக்கிறார்.
இத்திட்டத்தின்படி, லிட்டருக்கு 5 பைசா வீதம் ஒரு நாளுக்கு 7.5 கோடி லிட்டர் தண்ணீரைப் பெற மாதத்துக்குஆகும் செலவு ரூ.11.25 கோடிதான். ஆண்டுச் செலவு ரூ.135 கோடி. வீராணம் திட்டத்துக்கு ஆகும் செலவில் இதுபாதிதான்.
பாதி செலவிலேயே தண்ணீர் பெறும் நிரந்தர திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, தாற்காலிகமான வீராணம்திட்டத்தை நிறைவேற்றுவது எந்த வகையில் நியாயம் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications