மேட்டூர் திறப்புக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
திருச்சி:
மேட்டூர் அணையை தற்போது திறக்கக் கூடாது. இதனால் விவசாயிகளுக்கு பலன் இருக்காது என்று தமிழ்நாடுகாவிரி பாசன விவசாயிகள் நல சங்க பொதுச் செயலாளர் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேட்டூர் அணை வருகிற 12ம் தேதி (வியாழன்) முதல் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து இரு வேறு கருத்துக்கள் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
திருச்சியைச் சேர்ந்த தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நல சங்க பொதுச் செயலாளர் ரங்கநாதன் கூறுகையில்,
ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு அணையை திறப்பதே சரியானதாக இருக்கும். காரணம் இப்போதுதான் காவிரிபாசனப் பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. எனவே ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு அணையை திறந்தால்தண்ணீர் வீணாவது ஓரளவுக்குத் தடைபடும்.
இப்போதே தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் சம்பா சாகுபடிக்கு பெரிய அளவில் பலன் இருக்காது என்றார் அவர்.அதேசமயத்தில் தஞ்சை, திருவாரூர் பகுதி விவசாயிகள் மத்தியில் அணை திறப்புக்கு வரவேற்பு உள்ளது.












Click it and Unblock the Notifications