வைகோ: உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்குகளை வாபஸ் பெறும் தமிழகஅரசின் அறிவிப்பை ஏற்று முடிவெடுக்குமாறு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மனு தாக்கல்செய்துள்ளார்.
இந் நிலையில், பொடா மறு ஆயுவுக் குழு உத்தரவிட்ட பிறகும் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க தமிழக அரசுமறுத்து வந்ததை எதிர்த்து வைகோ உள்ளிட்ட 9 பேரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்றுவிசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ், வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதானவழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், கடந்த மே 7ம் தேதி, வைகோஉள்ளிட்டவர்கள் மீதான பொடா வழக்கை விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்தத் தடை காரணமாக வைகோ உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 8 பேர் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறும் தமிழக அரசின் அறிவிப்பைஏற்று, முடிவெடுக்குமாறு பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் வரியவா, ஏ.கே.மாத்தூர் ஆகியோர் அடங்கியபெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 4 வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications