சுதந்திர தின விழா: ஜெ. கொடியேற்றினார்
சென்னை:
நாடு முழுவதும் 57வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை கோட்டைக்கு கொடியேற்ற வந்த முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலாளர் லட்சுமி பிரானேஷ்வரவேற்றார். இதையடுத்து போலீஸ் மற்றும் என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
பின்னர் விழா மேடைக்கு சென்று ஜெயலலிதா இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் சபாநாயகர்காளிமுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதிகள், அமைச்சர்கள்,வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.
சாதனை புரிந்தவர்களுக்கும் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கும் விழாவில் ஜெயலலிதா விருதுகளைவழங்கினார். கொடியேற்றிய பின்பு ஜெயலலிதா உரையேதும் ஆற்றவில்லை.
விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ரூ.200 கோடி நலத்திட்டங்கள்:
தமிழக மக்களுக்கு ஜெயலலிதா விடுத்துள்ள சுதந்திர தின செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
கிராமப் புறங்களின் முன்னேற்றத்திற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில், நமது கிராமம் என்ற திட்டம்செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி கிராமங்களில் வறுமையை ஒழிப்பு, கழிவறை வசதி மேம்பாடுஉள்ளிட்ட நலப்பணிகள் செய்யப்படும்.
தீவிரவாத, பிரிவினைவாத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு நாடு ஆளாகியுள்ளது. இந்த சக்திகளை எதிர்த்துப்போராடும் கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ளது என்று கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் கொடியேற்றம்:
சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர்மன்மோகன் சிங் கொடியேற்றி வைத்து, முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
வேளாண்மை, நீராதாரம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்புத் துறைகள், நகர்ப்புற வளர்ச்சிதிட்டங்களுக்கு ஊக்கம் உள்ளிட்ட 7 துறைகளுக்கு முன்னுரிமை அஹித்து நாட்டின் பொருளாதாரம் உயர்த்தப்படும் என்றும்,தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மன்மோகன் சிங் தனது சுதந்திர தின உரையில்குறிப்பிட்டார்.
மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
குண்டு வெடிப்பில் 16 பேர் பலி:
இதற்கிடையே அசாம் மாநிலம் தேமாஜியில் உள்ள கல்லூரி ஒன்றில் சுதந்திர தின நிகழ்ச்சியின் போது உல்பாதீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் பலியாகினர். சுதந்திர தினஅணிவகுப்பில் கலந்து கொண்ட பள்ளிக் குழந்தைகளும், விழாவைப் பார்வையிட வந்தவர்களும் இந்த விபத்தில்சிக்கியுள்ளனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications