மதுரை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
மதுரை:
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி (திங்கள் கிழமை) முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தப் போவதாக மதுரை வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிகளைத் திரும்பப் பெறக் கோரியும், திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை மதுரை உயர் நீதிமன்றக் கிளையுடன் இணைக்கக் கோரியும், சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டியை பணி நீக்கம் செய்யக்கோரியும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட வழக்கறிஞர்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் வரும் திங்கள்கிழமையிலிருந்து மேலும் தீவிரமடைகிறது. திங்கள்கிழமையிலிருந்துசாகும்வரை உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபடப்போவதாக மதுரை வழக்கறிஞர்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி எம்.பிக்கள் வலியுறுத்தல்:
இந் நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி திமுக கூட்டணி எம்.பிக்கள்,டெல்லியில் சட்ட அமைச்சர் பரத்வாஜை இன்று நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு பரத்வாஜ், இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதியையும் அணுகி ஆலோசனை கேட்கப்படும் என்று கூறினார்.
பாஜக கோரிக்கை:
இதற்கிடையே சென்னையில் நிருபர்களைச் சந்தித்த அகில இந்திய பாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன் இதுதொடர்பாக கூறுகையில், வழக்கறிஞர் பணி என்பது ஆசிரியர் பணியைப் போல இன்றியமையாதது.
எனவே வழக்கறிஞர்கள் இது போன்ற போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும். இப்போது எழுந்துள்ளபிரச்னையில் உச்ச நீதிமன்றம் உடனே தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications