வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்: உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பணிக்குச் செல்லும் வழக்கறிஞர்களைத் தடுக்கும் வழக்கறிஞர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறும், நீதிமன்றப் பணிகள் எந்தத் தடையும் இன்றி நடக்க ஆவனசெய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷ்னருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், பணிக்குச் செல்லும் பிறவழக்கறிஞர்களைத் தாக்கி வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தக்குள்ளேயே அடிதடி, நீதிபதிகள்உருவப் பொம்மை எரிப்பு போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் உயர் நீதிமன்றத்திலும் சென்னையில் உள்ள பிற நீதிமன்றங்களிலும் பணிகள் ஸ்தம்பித்துப்போயுள்ளன.
இந் நிலையில் நீதிமன்றத்தில் பணிகள் பிரச்சனையின்றி நடக்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்குமாறுடிராபிக் ராமசாமி என்ற சமூக நல ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், உயர் நீதிமன்றம்மற்றும் பிற விசாரணை நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைஎடுக்குமாறு சென்னை மாநகர கமிஷ்னருக்கு உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் செல்லும் எந்த வழக்கறிஞரையும் யாரும் தடுக்காமல் இருப்பதையும், நீதிபதிகளின்பணிகளுக்கு யாரும் இடைஞ்சல் செய்யாமலும் பார்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டனர்.
மேலும் தமிழக உள்துறைச் செயலாளர், காவல்துறை ஆணையர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்சங்கத் தலைவர், சென்னை பார் அசோசியேசன் தலைவர், தமிழ்நாடு பார் அசோசியேஷன் தலைவர்ஆகியோருக்கும் நோட்டீஸ்கள் அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.
ஒரு வாரத்தில் உரிய விளக்கமளிக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தடியடி:
இந் நிலையில் இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி எதிராக ஊர்வலம் நடத்திய வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.அப்போது வழக்கறிஞர்கள் ரகளையில் ஈடுபடவே அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அப்போது போலீசாரின் வாகனங்கள் மீது வழக்கறிஞர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதோடு,டயர்களில் காற்றையும் பிடுங்கிவிட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களைபோலீசார் கீழே இறக்கிவிட்டுச் சென்றனர்.
போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், அங்கு நின்றிருந்த பத்திரிக்கையாளர்கள் மீதும் கல்வீசித்தாக்குதல் நடத்தினர். மேலும் உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்தைநிறுத்தி வழக்கறிஞர்கள் கலாட்டாவில் இறங்கினர்.












Click it and Unblock the Notifications