இலங்கை: பிரதமரை சந்திக்கிறார் வைகோ
திருச்சி:
இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியாவும் பங்கெடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர்மன்மோகன் சிங்கை, இலங்கை எம்.பிக்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை விடுக்கப் போவதாகமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தனது மறுமலர்ச்சி நடை பயணத்தில் திருச்சி வந்த வைகோவை பிரதமர் மன்மோகன் சிங்செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். இந் நிலையில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
இலங்கை எம்.பிக்களான செனாதி ராஜா, சந்திரசேகரன் ஆகியோர் சமீபத்தில் 22 பேர் குழுவுடன்பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினர். அப்போது என்னையும் உடன் இருக்குமாறுகோரினர். அப்போது என்னால் உடனிருக்க முடியவில்லை.
அடுத்த மாதம் இந்த எம்.பிக்கள் இருவரும் மீண்டும் பிரதமரை சந்திக்கும்போது நானும்உடனிருப்பேன். இலங்கையில் நிரந்த அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடவேண்டும் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கிடம் தெரிவித்திருக்கிறேன்.
பல விஷயங்கள் குறித்தும் விளக்கினேன். முந்தைய மத்திய அரசுகளிடம் சொல்லப்படாத பலவிஷயங்களையும் நட்வர் சிங்கிடம் விளக்கினேன். என்னால் முடிந்தவரை இலங்கையில் நிலவும்சூழல் குறித்து தெளிவாக அவரிடம் சொன்னேன். நட்வர் சிங் முழுமையாக விவரங்களைக்கேட்டறிந்தார்.
தூத்துக்குடி- கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு துவக்க வேண்டும். இந்தவிஷயத்தில் ஜெயலலிதாவின் எதிர்ப்பைப் பற்றி கவலைப்படக் கூடாது என்றார்.
கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்டால் புலிகளால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு பிரச்சனை வரும்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது, ஜெயலலிதா எதற்கெடுத்தாலும்இதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஊடுருவ வேண்டும் என்று நினைத்தால் எப்படியும்ஊடுருவுவார்கள்.
கடந்த 12 வருடத்தில் புலிகள் யாராவது இங்கே ஊடுருவினார்கள் என்று எந்த புலனாய்வுஅமைப்பாவது சொல்லியிருக்கிறதா? என்றார் வைகோ.
மேலும் அவர் பேசுகையில், மதிமுகவின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம்அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க எங்களிடம் தக்க சான்றுகள் உள்ளன. இதற்கு நடைப்பயணம் முடிந்ததும்பதிலளிப்போம். நடைப் பயணத்தில் இதுவரை 400 கி.மீ. தூரத்தைக் கடந்துள்ளேன் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications