இராக்: இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
மாஸ்கோ:
இராக்கில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்கள் மூவரும் பாதுகாப்பாக இருப்பதாகவெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் தெரிவித்தார்.
கொழும்பு செல்லும் வழியில் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
அவர்களை விடுவிக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன. இது போன்ற விஷயங்களில் கால நேரத்தைநிர்ணயிக்க முடியாது. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
இந்தியர்களை பணிக்கு அமர்த்திய குவைத் கல்ப் நிறுவனத்திடம் மீட்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இராக்கின் பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் இந்தியா ஜாக்கிரதையாக செயல்பட்டுவருகிறது.
இந்தியர்களை தீவிரவாதிகள் நல்ல முறையிலேயே வைத்துள்ளனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என்றார்.
அந்தர்யாமி, திலக்ராஜ், சுக்தேவ் சிங் ஆகிய மூன்று இந்தியர்களையும் மூன்று கென்யர்களையும் ஒருஎகிப்தியரையும் தீவிரவாதிகள் கடந்த ஜூலை 21ம் தேதி கடத்திச் சென்றனர்.
இவர்களை மீட்க தீவிரவாதிகள் நியமித்த துலாய்மி என்ற தூதுவர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியது குவைத்கல்ப் போக்குவரத்து நிறுவனம்.
ஆனால், பண பேரம் காரணமாக பேச்சில் முன்னேற்றம் ஏற்படாததால் அதிலிருந்து விலகிக் கொண்ட அந்தநிறுவனம், நேரடியாகவோ அல்லது வேறு தூதர் மூலமோ தான் இனி தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவோம்என்று கூறிவிட்டது.
ஆனால், தீவிரவாதிகள் இதுவரை வேறு தூதர் யாரையும் அறிவிக்கவில்லை. இதனால் சிக்கல் நீடித்துக்கொண்டுள்ளது.
44 இந்தியர்கள் திரும்பினர்:
இதற்கிடையே ஈராக்கில் வேலைக்குச் சென்ற இந்தியர்களில் 44 பேர் நாடு திரும்பிவிட்டதாக இன்றுநாடாளுமன்றத்தில் இன்னொரு வெளியுறவுத்துறை இணையமைச்சரான ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.
இதில் 30 பேர் பலூஜாவில் அமெரிக்க முகாமில் இருந்ததாகவும், 14 பேர் வடக்கு ஈராக்கில் சிக்கி இருந்ததாகவும்தெரிவித்தார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications