2 ரஷ்ய விமானங்கள் வானில் சிதறி 90 பேர் பலி
மாஸ்கோ:
ரஷ்யாவில் இரு விமானங்கள் மர்மமான முறையில் வானில் வெடித்துச் சிதறின. இதில் 90 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 அன்று நடந்ததைப் போல இந்த இரு விமானங்களையும் தீவிரவாதிகள்கடத்தியிருக்கலாம் என்றும், அவர்களுடன் பயணிகளும் விமானிகளும் போராடியபோது, குண்டுகளை வெடிக்கச்செய்து விமானங்களைத் தகர்த்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அல்லது இந்த விமானங்களில் தரையிலேயே தீவிரவாதிகள் குண்டுகளை ஏற்றியிருக்கலாம் என்றும்சந்தேகிக்கப்படுகிறது.
இதில் ஒரு விமானத்தின் விமானி, விமானம் பிரச்சனையில் உள்ளதாக (distress signal) தரைக் கட்டுப்பாட்டுநிலையத்துக்குத் தகவல் தந்தார். அந்தத் தகவல் வந்த சில நிமிடங்களில் விமானம் ரேடாரில் இருந்து காணாமல்போனது.
அந்த விமானம் மாஸ்கோவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள துலா பகுதியில் தரையில் விழுந்தது. இதில்இருந்த 46 பேரும் பலியாகிவிட்டனர். இந்த விமானம் வானில் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியபடியே தான்தரையில் வந்து விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
அதே போல இன்னொரு விமானமும் மாஸ்கோவில் இருந்து 965 கி.மீ தூரத்தில் உள்ள ரோஸ்டோவ் என்றபகுதியில் வெடித்துச் சிதறியபடி தரையில் விழுந்தது. முதல் விமானம் தரை மோதிய சில நிமிடங்களில்இரண்டாவது விமானமும் தரையில் விழுந்தது. இதில் இருந்த 44 பயணிகளும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
ரஷ்யாவுக்கு எதிராக செசன்ய தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. செசன்யாவை தனிநாடாக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. அங்கு 3 நாட்களுக்குமுன்பு தான் ரஷ்ய கட்டுப்பாட்டில் தேர்தல்கள் நடந்து முடிந்தன.
இந் நிலையில் இந்த மர்ம விமான விபத்துக்கள் நடந்துள்ளன.
வெடித்துச் சிதறிய முதல் விமானம் டுப்பலோவ்-134 ரகத்தைச் சேர்ந்தது. இரண்டாவது விமானம் டுப்பலோவ்-154ரக விமானமாகும். இரு விமானங்களுமே ரஷ்ய நேரப்படி நேற்றிரவு மாஸ்கோவின் டோமோடிடோவோ விமானநிலையத்தில் இருந்து 40 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்துக் கிளம்பின.
முதல் விமானம் வேலோகாகிரேட் நகருக்கும், இன்னொரு விமானம் சோச்சி நகருக்கும் சென்று கொண்டிருந்தன.அவை வெடித்தபடியே தரையில் விழுந்தால், அவற்றின் பாகங்கள் சுமார் 50 கி.மீ. தொலைவு வரை சிதறிக்கிடப்பதாக ரஷ்ய உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இரு சம்பவங்களும் சில நிமிட இடைவெளியில் நடந்துள்ளன.
இந் நிலையில், இந்த விமானங்களில் ஏறுவதற்காக 6 பேர் செக்-இன் செய்ததாகவும், ஆனால் அவர்கள்விமானத்தில் ஏறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது பெட்டிகள்தரையிறக்கப்பட்டுவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களைத் தேடும் பணியும்முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களது பெட்டிகள் அனைத்தும் இறக்கப்பட்டனவா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும், அவற்றில்குண்டுகள் இருந்திருக்கலாம் என்றும் சில அதிகாரிகள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications