ரூ.1,680 கோடி,14.5 லட்சம் நிலக்கரி வேண்டும்: ஜெ
சென்னை:
தமிழகத்துக்கு ரூ. 1,680 கோடி வறட்சி நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்றும், மின்சாரம்தயாரிக்க 14.5 லட்சம் டன் கூடுதல் நிலக்கரி வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் வேலைக்கு உணவு திட்டத்தின் கீழ் தமிழகத்துக்குக் கூடுதலாக 5.4 லட்சம் டன் அரிசி வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இன்று மாலை பிரதமர் சென்னை வரும்போது இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம்அளிக்க முதல்வர் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் காய்ச்சல் காரணமாக அவரது பயணம்ரத்தாகிவிட்டதால் கடிதமாக இதை அனுப்பியுள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அனுப்பியுள்ள அந்தக் கடித விவரம்:
சென்னையின் குடிநீர்த் தேவையை சமாளிக்க லாரிகளில் தான் தண்ணீர் சப்ளை செய்ய்பட்டுவருகிறது. இதற்கு மட்டும் உடனடியாக ரூ. 500 கோடி தேவைப்படுகிறது.
மேலும் மாநிலம் முழுவதும் நிலவும் வறட்சியை சமாளிக்கவும் நிதி தேவைப்படுகிறது. இதனால்தமிழகத்துக்கு உடனடியாக ரூ. 1,680 கோடியை ஒதுக்க வேண்டும்.
வறட்சியால் விவசாயப் பணிகள் நின்று போய்விட்டதால் ஏழை விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு வேலைக்கு உணவு திட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டியுள்ளது. இதற்காக 5.4லட்சம் டன் அரிசியை தமிழகத்துக்கு கூடுதலாகத் தர வேண்டும்.
நீர் மின் நிலையங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் அனல் மின்சாரத்தையே தமிழகம்முழுமையாக சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நிலக்கரியின் தேவைஅதிகரித்துள்ளது.
21 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியை தமிழகம் இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில்கூடுதலாக 14.5 லட்சம் நிலக்கரியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு நாட்டிலேயே மிக பயங்கரமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம்தமிழகம் தான் என்பதை மனதில் வைத்து இந்த உதவிகளை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications