விவசாயிகள் மீது ஜெ.க்கு அக்கறை இல்லை: நல்லக்கண்ணு
சென்னை:
விவசாயிகள் நலன் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் நல்லக்கண்ணு கூறினார்.
இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
விவசாயிகள் நலன் குறித்து இந்த அரசுக்கு அக்கறை இல்லை. வறட்சி நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்குதாமதமாக கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
சம்பா சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு உரிய பயிர்கடன் கிடைக்கவில்லை.
நிபந்தனை எதுவும் இன்றி விவசாயிகள் உடனடியாக கடன்பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலஅரசை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்கள் உள்பட 100இடங்களில் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மறியல் அறப்போராட்டம் நடத்தும்.
ஆளுநர்கள் மீது அதிக அளவு புகார்கள் வந்தால் மத்திய அரசு அவர்களை மாற்றுவதில் எந்தவித தவறும் இல்லை.அதேநேரத்தில் ஆளுநர் நியமனத்தின் போது மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தும்நியாயமானதுதான்.
தமிழக அரசு பெரிய திட்டங்களை ஒப்பந்தக்காரர்களின் லாபத்திற்காக மட்டுமே கொண்டு வருகிறது. அதில்மக்கள் நலன் இல்லை.
பாஜகவினருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. மக்கள் பிரச்சினை குறித்து பேசாமல் ஜனநாயகரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசை இயங்க விடாமல் தடுக்கிறார்கள்.
நாளை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம்நடக்கிறது. அதில் நாடாளுமன்றத்தில் பா.ஜகவினரின் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications