போஸ்ட் ஆபிசில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
சென்னை:
வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் வரும் 15ம் தேதியிலிருந்து அஞ்சல் துறை ஊழியர்கள் ஈடுபடஉள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியிலிருந்துநீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்தியது.
இந் நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியை தபால் நிலையங்களில் நடத்த தேர்தல் ஆணையம்தீர்மானித்துள்ளது. இந்த பணி வரும் 15ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் முதல் அடுத்த மாதம் 15ம் தேதிவரை எல்லா தபால் நிலையங்களிலும் அந்தந்த பகுதிக்குரிய வாக்காளர் பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும். அதில்தங்களது பெயர் இருக்கிறதா என்பதை வாக்காளர்கள் சரிபார்க்க வேண்டும்.
பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர் மூலம் கொடுத்துஅனுப்பலாம். அரசியல் கட்சிகள், அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் சார்பில் மொத்தமாக கொடுக்கப்படும்விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி கடிதத்தை தபால் அலுவலகம் உடனடியாக வழங்கும்.இதனையடுத்து விண்ணப்பபடிவங்களை சரிபார்க்கும் பணியை தபால் விநியோகிக்கும் ஊழியர்கள் செய்வார்கள்.
தபால் ஊழியர்கள் சரிபார்த்த பின்பு அந்த விண்ணப்ப படிவங்களை தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி வாரம் ஒருமுறை பெற்றுச் செல்வார்.
மேலும் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் குறித்தும் தபால் ஊழியர்கள் விசாரித்து தேர்தல்ஆணையத்துக்கு கடிதம் கொடுப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தப் பணியில் வழக்கமாக மாநில அரசு ஊழயர்களும் ஆசிரியர்களுமே அமர்த்தப்படுவது வழக்கம். அதில்ஏகப்பட்ட குளறுபடிகளை ஊழியர்கள் செய்துவிட்டதாக அதிமுகவும், மாநில அரசு குழறுபடி செய்துவிட்டதாகதிமுகவும் லாவணி பாடின. இந் நிலையில் இந்தப் பணி தபால்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தத் துறையின் அமைச்சராக திமுகவின் தயாநிதி மாறன் தான் இருக்கிறார். இதனால் அதிமுக தரப்பிலிருந்துஇதற்கும் எதிர்ப்பு எழலாம் என்று நம்பப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications