உசிலம்பட்டி எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு
உசிலம்பட்டி:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் பார்வார்ட் பிளாக் கட்சியினருக்கு இடையே ஏற்பட்டமோதல் தொடர்பாக, உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. சந்தானம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்து ராமலிங்கதேவர் கல்லூரி வளாகத்தில் பார்வர்டு பிளாக் கட்சி தலைவர்மூக்கையா தேவருக்கு கட்டப்பட்ட மணிமண்டபத்தைத் திறப்புவிழாவின் போது பார்வர்டு பிளாக் கட்சியின் 3பிரிவினருக்கு இடையே மோதல் மற்றும் கல்வீச்சு ஏற்பட்டது.
இதைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினார்கள். கல்வீச்சு மற்றும் தடியடியில் சிக்கி, பார்வர்ட்பிளாக் கட்சி (வல்லரசு பிரிவு) தலைவர் கதிரவன், இளைஞர் அணி தலைவர் தெய்வேந்திரன் உட்பட பலர்காயமடைந்தனர்.
இந்த மோதல் தொடர்பாக தெய்வேந்திரன், உசிலம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில்என்னையும், எனது கட்சி தலைவர் கதிரவனையும், உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. சந்தானம் தனதுஆதரவாளர்களுடன் அரிவாளால் கொலை செய்ய முயன்றார் என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சந்தானம், அவரது மகன் இளங்கோவன் உட்பட 23 பேர் மீது இந்திய தண்டனைசட்டம் 307 (கொலை முயற்சி), 147 (சட்டத்துக்கு புறம்பாக கூடுதல்), 148 (ஆயுதங்களை வைத்திருத்தல்), 323(சிறிய காயம் ஏற்படுத்துதல்), 324 (பெரிய காயம் ஏற்படுத்துதல்), 506 (2) உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்வகையில் அச்சுறுத்தல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எம்.எல்.ஏ. சந்தானம், முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications