சுயேச்சை எம்எல்ஏ கைது பின்னணியில் அமைச்சர்?
பாளையங்கோட்டை:
மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அமைச்சர் நைனார் நாகேந்திரனின் தூண்டுதலின்பேரில் தான் ராதாபுரம் சட்டமன்றத்தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுயேச்சை உறுப்பினர் அப்பாவு சென்னையில் நேற்று எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் வைத்து திடீரென கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னணி குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுவதாவது:
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சீனிவாசன் என்பவர் நெல்லை மாவட்டத்தில் இலுமனைட் என்ற ரசாயனம்அடங்கிய மணலை அள்ளி ஏற்றுமதி செய்து வருகிறார். இவருக்கு அமைச்சர் நயினார் நாகேந்திரன் பின்னணியில்உள்ளார்.
அணு சக்திக்குப் பயன்படும் இந்த இலுமனைட் ஏற்றுமதி குறித்து இந்திய அணு ஆராய்ச்சித்துறைக்கு எம்.எல்.ஏ.புகார் கடிதம் அனுப்பியதாகவும், அதனால் தான் அவர் மீது சீனிவாசன் மிரட்டல் புகார் கொடுத்து கைது செய்யவைத்திருக்கிறார் என்கிறார்கள். இந்தக் கைதுக்கு சீனிவாசனுக்கும் அமைச்சருக்கும் உள்ள தொடர்பே காரணம்என்கிறார்கள்.
டிஜிபியிடம் சீனிவாசன் கொடுத்துள்ள புகாரில், தன்னை அப்பாவு மிரட்டியதாகவும், தன் பெயரில் உள்ள 37 ஏக்கர்நிலத்தை எழுதி வாங்கி அப்பாவு மோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நேற்று நெல்லை போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்ட அப்பாவு, நெல்லை கொண்டு செல்லப்பட்டுபோலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்ட்டார்.
இதையடுத்து அப்பாவுடன் சேர்த்து அவரது ஆதரவாளர்கான ஆறுமுகம், மணியப்பன், இளங்கோ, வக்கறிஞர்மணி ஆகியோரும் சீனவாசனை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டனர்.
5 பேரும் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சீனிவாசனைப் போலவே நெல்லை பகுதியில் இன்னொரு நிறுவனமும் இலுமினைட் மணல்ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்களிடையிலான தொழில் போட்டியில் சீனிவாசனுக்கு அமைச்சரும்,இன்னொரு தரப்புக்கு அப்பாவுவும் ஆதரவு தந்ததாகவும் கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications