செப்டம்பர் 11: செளதியில் கார் குண்டு வெடிப்பு
துபாய்:
செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கார் குண்டு வெடித்தது.
இன்று நியூயார்க்கில் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய செப்டம்பர் 11 தினம் என்பதால்அமெரிக்காவில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல இஸ்ரேல், செளதி, குவைத் உள்ளிட்ட அமெரிக்க ஆதரவு நாடுகளிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை ஜெட்டா நகரில் செளதி அமெரிக்கன் வங்கியின் எதிரே கார் குண்டு வெடித்தது. இதில்அந்தக் காரில் இருந்த தீவிரவாதிகளில் ஒருவன் காயமடைந்தான். அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரில் வந்த மேலும் மூன்று பேர் அருகே உள்ள அமெரிக்கத் தூதரகக் கட்டடத்தில் பக்கத்தில் உள்ள கட்டடத்தில்புகுந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதையடுத்து அக் கட்டடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் திருடப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications