வைகோ மீதான பொடா விசாரணைக்கு மீண்டும் தடை
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்துக்குவிதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை நீட்டித்துள்ளது.
பொடா வழக்கை வாபஸ் பெறுமாறு மறு ஆய்வுக் குழு செய்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்க மறுத்ததையடுத்துவைகோவின் சார்பில் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, பொடா வழக்கை விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அத்தோடு,வைகோ மீதான வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், அதில் போதிய காரணங்கள் கூறப்படவில்லை என்று கூறி வழக்கை வாபஸ் பெறபூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் அனுமதி தர மறுத்துவிட்டார்.
இந் நிலையில் வைகோ முன்பு தமிழக அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்த மனு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வரியவா, சேமா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இதனை விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், வைகோ மற்றும் 8 மதிமுகவினர் மீதான பொடா வழக்கை விசாரிக்க பூந்தமல்லிநீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கிறோம்.
தன் மீதான வழக்கை வாபஸ் பெற மறுத்த பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வைகோவும் 8மதிமுகவினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்தனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications