குஜால் குடித்தனம்: டிஎஸ்பி ராஜசேகர் சஸ்பெண்ட்
மதுரை:
ஜெயலட்சுமி எங்கு வேண்டுமானாலும் தங்கியிருக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தனதுஎஸ்.எஸ்.காலனி வீட்டுக்குத் திரும்பினார் ஜெயலட்சுமி. அங்கு நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
எனது கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது சந்தோஷம் அளிக்கிறது. சிபிஐ விசாரணைநியாயமாக நடைபெறும் என நம்புகிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். சிபிஐவிசாரணையின்போது, என்னைச் சித்திரவதைக்குள்ளாக்கிய மேலும் சில காவல் துறை அதிகாரிகளின் பெயர்களைதெரிவிப்பேன் என்றார்.
இதற்கிடையே ஜெயலட்சுமியுடன் தனிக்குடித்தனம் நடத்திய திருச்சி ஆயுதப்படை எஸ்பிராஜசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 1999ம் ஆண்டில் திருநெல்வேலியில் டி.எஸ்.பியாகஇருந்த ராஜசேகரன் திருச்செந்தூரில் வைத்து ஜெயலட்சுமிக்கு தாலி கட்டினார்.
பின்னர் திண்டுக்கல்லில் வீடு பிடித்து ஜெயலட்சுமியை தங்க வைத்து அவ்வப்போது குடித்தனம்நடத்தியுள்ளார். ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்துக் கொண்ட முதல் போலீஸ் அதிகாரியும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஜெயலட்சுமி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதை, இவ்வழக்கில்கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைமைக் காவலர் கண்ணனின் வழக்கறிஞர்கள் காந்தி மற்றும்அழகுமணி ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், இந்த உத்தரவை உளமார வரவேற்கிறோம். இதில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்என நம்புகிறோம் என்றனர்.
ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் வெங்கடேசன் கூறுகையில், கடமை தவறும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்தஉத்தரவு ஒரு பாடமாகும். இது பாதிக்கப்படும் ஒட்டுமொத்தப் பெண்களுக்குக் கிடைத்த நீதியாகும் என்றார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி இதுவரை அரசு காப்பகத்திலிருந்து தங்கியிருந்த ஜெயலட்சுமி மதுரை எல்லீஸ்நகரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார். அவரது பாதுகாப்புக்கு இரண்டு பெண் போலீஸார்நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை வீடு திரும்பிய ஜெயலட்சுமியைப் பார்க்க அப் பகுதியில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications