வீடியோ ஆதாரம்: போலீஸ் வயிற்றைக் கலக்கும் ஜெயலட்சுமி
மதுரை:
போலீஸ் அதிகாரிகள் என்னைக் கொடுமைப்படுத்தியதை வீடியோ ஆதாரங்களுடன் சிபிஐயிடம் தெரிவிப்பேன்என்று போலீஸ் புகழ் ஜெயலட்சுமி கூறினார்.
மதுரை அரசு பெண்கள் காப்பகத்தில் இருந்த, எல்லீஸ் நகரில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்த ஜெயலட்சுமியிடம்பேட்டி காண பத்திரிக்கையாளர்கள் அவர் வீட்டு முன்பு கூடினர். அவர்களிடம் ஜெயலட்சுமி, தனதுவழக்கறிஞர்கள் இல்லாமல் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறினார்.
இதையடுத்து நிருபர்கள், ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் அழகர்சாமி, வெங்கடேசன் ஆகியோருடன் தொடர்புகொண்டனர். இதனையடுத்து வழக்கறிஞர்கள் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்தனர். அதன்பின்புபத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலட்சுமி கூறியதாவது:-
போலீஸ் அதிகாரிகளால் நான் மிகுந்த கொடுமைக்கு உள்ளானேன். இன்ஸ்பெக்டர் ஷாஜகானும் அவரது,மைத்துனரான அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் உதவியாளரும் சேர்ந்து என்னை 5 வருட ஒப்பந்த அடிப்படையில்மும்பை விபச்சார விடுதியில் விற்க முயற்சி செய்தனர். பின்பு நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தேன்.
எனக்கு நேர்ந்த துன்பங்கள் வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. இந்த வழக்கின் தீர்ப்பு தவறு செய்தபோலீஸார்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
நான் ஒட்டுமொத்த காவல் துறையை குற்றம் சாட்டவில்லை. தவறு செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்படவேண்டும். சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தனை மிரட்டல்கள்வந்தாலும் அதற்கு பயப்படாமல் சிபிஐயிடம் அனைத்து உண்மைகளையும் சொல்வேன்.
போலீஸ் அதிகாரிகள் எனக்கு இழைத்த கொடுமைகளை வீடியோ கேசட், போட்டோ ஆதாரங்கள் மூலம் சிபிஐவிசாரணையில் தெரிவிப்பேன்.
எனது பெயரில் ஏதாவது சொத்து, பணம் இருந்தால் நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட நான்தயாராக இருக்கிறேன் என்று ஜெயலட்சுமி கூறினார்.
இதற்கிடையே, ஜெயலட்சுமி இப்போது கடுமையான பணநெருக்கடியில் இருப்பதாகவும், சாப்பாட்டுக்கு கூடஅவரது வழக்கறிஞர் அழகர்சாமி தான் கொடுத்து உதவுவதாகவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications