திரையுலகினர் பேரணி: ஜெ.விடம் மனு
சென்னை :
திருட்டு விசிடியை ஒழிக்கக் கோரி தமிழ்த் திரையுலகினர் இன்று சென்னையில் பேரணி நடத்தினர். பேரணியின்முடிவில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ரஜினி, கமல் இருவரும் இந்தப்பேரணியில் கலந்து கொள்ளவில்லை.
திருட்டு விசிடி தயாரிப்பவர்களையும், விற்பனை செய்பவர்களையும், கேபிள் "டிவியில் புதிய படங்களைவெளியிடுபவர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்; இவர்களுக்கு அதிகபட்சமாக 5ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க வேண்டும்;
திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும்; ஆம்னி பஸ்களிலும், அரசுபஸ்களிலும் திருட்டு விசிடி ஒளிபரப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும்; திருட்டு விசிடி குறித்து பொதுமக்கள் புகார்தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் மற்றும் ஈ-மெயில் முகவரி வழங்க வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகத்தின் சார்பில் சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.
நடிகர், -நடிகைகள் மற்றும் சினிமா உலக பிரமுகர்கள் தி. நகரில் உள்ள நடிகர் சங்க கட்டடத்திலிருந்து அண்ணாசாலையில் உள்ள மன்றோ சிலைக்கு சென்றனர். அங்கு காலை 10 மணிக்கு பேரணி தொடங்கியது. தயாரிப்பாளர்சங்க தலைவர் முரளிதரன், நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், பெப்சி தலைவர் விஜயன், இயக்குநர்கள் சங்கத்தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்திச் சென்றார்கள்.
ஊர்வலத்தில் நடிகர்கள் நெப்போலியன், சத்யராஜ், விக்ரம், பிரபு, டி.ராஜேந்தர், விஜய், சூர்யா, பிரகாஷ்ராஜ்,ஸ்ரீகாந்த், ஜெயம்ரவி, சிபிராஜ், நாசர், ராஜேஷ், சிலம்பரசன், விஜயகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், ராஜீவ், செந்தில்,அலெக்ஸ், சார்லி, ஸ்ரீமன், உதயா, மன்சூர் அலிகான், அருண்குமார், விக்னேஷ், வையாபுரி, மதன்பாப், பசுபதி,ஜீவா, சிட்டிபாபு, மயில்சாமி, கிரேன் மனோகர்,
நடிகைகள் குஷ்பு, மீனா, ஸ்னேகா, தேவயானி, காந்திமதி, மும்தாஜ், விந்தியா, நிரோஷா, நந்திதாதாஸ்,பாபிலோனா, தாரிகா,
தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம் சரவணன், அன்பாலயா பிரபாகரன், காஜா மைதீன், சித்ரா லட்சுமணன், கேயார்,இப்ராகிம் ராவுத்தர், இயக்குநர் பாலசந்தர், பார்த்திபன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
ஊர்வலத்தின்போது திருட்டி விசிடிக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு சென்றனர். ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் 10.45 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையைஅடைந்தது. அங்கிருந்து விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, விஜய், சூர்யா, பார்த்திபன், விக்ரம், முரளிதரன், ஏ.வி.எம்.சரவணன், இப்ராகிம் ராவுத்தர், கே.பாலச்சந்தர் உள்ளிட்ட திரைஉலக முக்கிய பிரமுகர்கள் மட்டும் தனி பஸ்சில் ஏறிதலைமை செயலகம் சென்றனர்.மற்றவர்கள் வாகனங்களில் ஏறி பிலிம் சேம்பருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுஒன்றையும் கொடுத்தார்கள். அந்த மனுவில், திருட்டு விசிடி தயாரிப்பாளர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யவேண்டும், படப்பிடிப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும், கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும்என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆவண செய்வதாக ஜெயலலிதா திரையுலகப் பிரமுகர்களிடம் தெரிவித்தார்.இதையடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து சினிமா உலக பிரமுகர்கள் விடை பெற்றனர்.
இந்தப் பேரணியையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை திரையரங்குகள் தமிழகம் முழுவதும்மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரஜினி, கமல் இருவரும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications