பாலியல் துன்புறுத்தல்: நர்சிங் மாணவிகள் மறியல்
திருநெல்வேலி:
பாலியல் தொந்தரவுக்கு ஆளான குற்றாலம் தனியார் நர்சிங் பயிற்சி நிறுவன மாணவிகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைமுற்றுகையிட்டு புகார் மனு கொடுத்தனர். அதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் மாணவிகள் இன்று சாலை மறியலில்ஈடுபட்டுள்ளனர்.
குற்றாலத்தில் தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் என்ற தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனம் உள்ளது. சட்டீஸ்கர்மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் சேர்ந்த 60க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் ரூ.8,000 முதல் ரூ.15,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இங்கு படிக்கும் மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்டர் ஆட்சியர் அதுல் ஆனந்த்வந்ததும் அவரிடம் மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், பயிற்சிக்காக ஏராளமான பணம் செலுத்தி விட்டோம். இப்போது இந்நிறுவனமே போலி என தெரியவந்துள்ளது.
நிறுவனத்திற்குத் தொடர்பில்லாத வெளி ஆட்கள் வந்து மாணவிகளை பாலியல்ரீதியில் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, எங்களதுப்ளஸ் 2 சான்றிதழ்களையும், நாங்கள் செலுத்திய பணத்தையும் திருப்பித் தரவேண்டும். வேறு நல்ல பயிற்சி மையத்தில் எங்களது படிப்பைத்தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் இந்தப் புகார் குறித்து தென்காசி சப்-கலெக்டரை விசாரிக்க உத்தரவிட்டார்.
இதே பயிற்சி மையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்த முயற்சி நடந்ததாகவும்மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததும், அதன்பின்பு தென்காசி சப் கலெக்டர், தாசில்தார் அங்குசென்று நேரில் விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்தான் மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இப்போதும் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் இன்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications