பூனூலை அறுத்த போலீஸ்காரருக்கு நீதிமன்றம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

புகார் கொடுக்க காவல் நிலையம் வந்தவர் அணிந்திருந்த பூனூலை அறுத்த போலீஸ்காரரின் ஊதிய உயர்வை ரத்துசெய்தது மட்டும் போதாது. அவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி கண்ணதாசன் கடுமையாக தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கல்லாறு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவருக்கும் இன்னொருவருக்கும்இடையே நிலத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 1991ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி திருக்கல்லாறுகாவல் நிலையத்தில் நீலகண்டன் புகார் கொடுத்தார்.

புகாரை வாங்கிய காவலர் திருஞானம் என்பவர் நீலகண்டனைக் கேலியாக பேசியுள்ளார். மேலும் அவர்அணிந்திருந்த பூனூலையும் அறுத்து எறிந்துள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த நீலகண்டன், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில்திருஞானம் பூனூலை அறுத்தது உண்மைதான் எனத் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து திருஞானத்தின் ஒரு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து காவல்துறைக் கண்காணிப்பாளர்உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், திருஞானம் மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி கண்ணதாசன் விசாரித்தார். அப்போது திருஞானத்தின் செயல் மிகச் சாதாரணமானதல்ல. ஒருசாதாரண மனிதன் இத்தகைய தவறை செய்திருந்தால் கூட பரவாயில்லை, அதுகுறித்து பரிசீலனை செய்ய வாய்ப்புஉள்ளது.

ஆனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்தவர் குறிப்பிட்ட சமுதாயத்தைக்கேலி செய்யும் வகையில் நடந்து கொண்டு பூனூலை அறுத்து எறிந்தது மன்னிக்க முடியாதது.

மனுதாரரின் ஊதிய உயர்வை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைத்தது மட்டும் போதாது, மாறாக அவரைபணியிலிருந்தே டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் என்று கடுமையாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து மனுவை வாபஸ் பெறுவதாக திருஞானத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்துதிருஞானத்தின் மனுவை டிஸ்மிஸ் செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+