துபாய் விமான நிலைய விபத்து: 4 தமிழர்கள் காயம்

Subscribe to Oneindia Tamil

துபாய்:

துபாய் விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள்பலியாகியுள்ளனர். இதில் ஒருவர் இந்தியர், மற்றவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மேலும் 4 தமிழக கட்டடத்தொழிலாளர்கள் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று நடந்த இந்த விபத்தில் 8 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. ஆனால், 5 பேர் மட்டுமே இறந்ததாகபோலீசார் கூறுகின்றனர். பலியான இந்தியரின் பெயர் பிரேம் சாகர் ஹன்ஸ் என்று தெரியவந்துள்ளது. இவர் எந்தமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று இன்னும் தெரியவில்லை.

இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் காயமடைந்து ரஷீத் மற்றும் பரஹா மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இவர்களில் 6 பேர் சிகிச்சை பெற்றுத் திரும்பிவிட்டனர். மேலும் 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தமிழர்கள் பெயர் விவரம்:

இவர்களில் கருப்பையா (தந்தை பெயர் பாண்டி) என்பவர் வயிற்றில் படுகாயத்துடன் ரஷீத் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

முத்து (தந்தை பெயர் சீனி), அழகன் (தந்தை பெயர் காளி), குமார் (தந்தை பெயர் மச்சக்காளை) ஆகியோர்சாதாரண காயங்களுடன் அல் பரஹா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் மும்பையைச் சேர்ந்த ஒருவரும் பஞ்சாபைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காயமடைந்த இந்தியர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் சென்று பார்த்தனர். நேற்றைய விபத்தில் காயமடைந்துபிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியர்கள் யாராவது உள்ளார்களா என்று விசாரித்துவருகின்றனர்.

நட்வருக்கு கருணாநிதி கடிதம்:

இந் நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலர் இந்த விபத்தில் இறந்திருப்பதாக எனக்கு வரும் செய்திகள்தெரிவிக்கின்றன. ஆனால் துபாய் அரசு பலியானவர்களின் எண்ணிக்கையை குறைத்தே வெளியிட்டுள்ளது.

எனவே இந்த விபத்து தொடர்பான உண்மை நிலவரத்தை வெளியிட மத்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

தூங்கும் இந்திய தூதரகம்:

இதற்கிடையே பலியான, காயமடைந்த இந்தியர்கள் குறித்து இதுவரை எந்த முறையான அறிவிப்பையும் ஐக்கியஅரபு நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடவில்லை. அதன் இணையத் தளத்திலும் இந்த விபத்து குறித்துஒரு வரி விளக்கமும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+