தமிழகத்தில் 11 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
சென்னை & டெல்லி:
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் இன்று காலை முதல்சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இச் சோதனைகள் நடந்து வருகின்றன. இதில் தமிழகம்,கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தில் 30 இடங்களில் சோதனைகள் நடக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 11 இடங்களில்சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தி வருகின்றனர்.
ஊழல், லஞ்சம், கமிஷனில் திளைக்கும் வங்கி, அரசுத்துறை, பொதுத்துறை, தனியார்துறை அதிகாரிகள்,தொழிலதிபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு இந்தச் சோதனைகள் நடந்து வருவதாக சிபிஐ வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
சென்னை கல்லூரியில்...
சென்னை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பச்சைமுத்துவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐஅதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையின் மிகப் பிரபலமானதனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் எஸ்.ஆர்.எம்மும் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி அதிகாரி வீட்டில்..
இது தவிர கோயம்பேட்டில் உள்ள தமிழக வருமான வரித்துறை துணை ஆணையர் சுபாகாந்த் சாஹுவின்வீட்டிலும் சோதனை நடக்கிறது. வரி ஏய்ப்பு செய்த பச்சைமுத்துவுக்கு சாஹூ உதவியாக இருந்ததாகக்கூறப்படுகிறது.
அதே போல சென்னை துறைமுக தலைமை எந்திர பொறியாளர் ஆறுமுகத்தின் வீடு, சேலம் இந்தியன் வங்கிமேலாளரின் வீடு, அலுவலகத்திலும் சோதனைகள் நடந்து வருகின்றன.
டைடல் பார்க் அதிகாரி:
சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க் அலுவலக மூத்த அதிகாரியின் வீட்டிலும், மணலி எண்ணெய்சுத்திகரிப்பு ஆலையின் மூத்த அதிகாரி குமார் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
அதே போல சென்னை அனுப் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன அதிகாரி வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனைநடத்தினர்.
திருச்சி, குன்னூரில்..
திருச்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரியின் வீட்டிலும், குன்னூரில் உள்ள வாக்சீன் தயாரிப்பு நிறுவனகொள்முதல் அதிகாரி சந்திரசேகர் என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது.
கோவையில்..
கோவையிலும் இரு வங்கி அதிகாரிகளின் வீடுகளிலும்சிபிஐ ரெய்ட் நடந்து வருகிறது.
ஹைதராபாத் பாஸ்போர்ட் அலுவலகத்தில்..
ஹைதராபாத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்தப்பட்ட ரெய்டின் போது லஞ்சம் வாங்கிய ஒரு ஊழியர் கைதுசெய்யப்பட்டார்.
பிகாரில்...
அதே போல தேசிய நெடுஞ்சாலைத்துறையின் பிகார் மாநில திட்ட இயக்குனர் மீதும், அவருடன் சேர்ந்துநெடுஞ்சாலைத்துறைக்கு ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ அதிகாரி மீதும்சிபிஐ இன்று வழக்குப் பதிவு செய்தது.
இந்த இருவரும் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக பிகாரைச் சேர்ந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையின்பொறியாளரான சத்யேந்திர துபே குற்றம் சாட்டியிருந்தார். மேலும் சில அரசியல்வாதிகள் மீதும் குற்றம் சாட்டிஅப்போதைய பிரதமர் வாஜ்பாயிக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் துபே மர்மமான முறையில் ரோட்டில்இறந்து கிடந்தார்.
இந் நிலையில் இன்று திட்ட இயக்குனரின் அலுவலகத்தில் சோதனை நடத்திய சிபிஐ, அவர் மீதும் முன்னாள்ராணுவ அதிகாரி மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்களைத் தவிர இன்று மட்டும் மேலும் 20 அதிகாரிகள்மீதும் சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லியில்..
டெல்லி நகராட்சி கூடுதல் ஆணையர் அலுவலகம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் சோதனைகள்தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் மேலும் பலரும் சிபிஐயிடம் சிக்கலாம் என்று தெரிகிறது.
இந்த ஆண்டில் சிபிஐ நடத்தியுள்ள மூன்றாவது தேசம் தழுவிய அதிரடி ரெய்ட் இது. கடந்த இரு முறையில்நடத்தப்பட்ட சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
போலி முத்திரைத் தாள்:
இதற்கிடையே போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல்கரீம் தெல்கி மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் இன்று பெங்களூர், மும்பையில் பாஸ்போர்ட் அலுவலகங்களில் சோதனைநடத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications