கிருஷ்ணா நீர்: ஜெ. நாளை ஹைதராபாத் பயணம்
சென்னை:
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் வேண்டுகோளை ஏற்று சென்னைக்கு கிருஷ்ணா நீரை விடுவிக்க ஆந்திரமுதல்வர் ராஜசேகர ரெட்டி சம்மதித்துள்ள நிலையில், இதே கோரிக்கை தொடர்பாக அவரை சந்திக்க முதல்வர்ஜெயலலிதா நாளை ஹைதராபாத் செல்கிறார்.
ஆந்திராவில் ரூ.144 கோடி செலவில் அமைக்கப்பட்ட 17 கி.மீ. தூர நெல்லூர் நான்கு வழி புறவழிச் சாலையைமத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு திறந்துவைத்தார் .இந்த விழாவில் ராஜசேகர ரெட்டியும் கலந்து கொண்டார்.
விழாவில் டி.ஆர்.பாலு பேசியதாவது:
ஆந்திராவில் சாலை வசதியை மேம்படுத்துவது பற்றி ராஜசேகர ரெட்டியுடன் ஆலோசனை நடத்துவதற்காக மட்டும்நான் இங்கு வரவில்லை. குடிநீர் கிடைக்காமல் கஷ்டப்படும் சென்னை மக்களுக்கு தெலுங்கு கங்கை கால்வாய்மூலம் உடனே தண்ணீர் திறந்து விடும்படி திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுக்கச் சொன்னார்.
அதை ஏற்றுத்தான் நான் இந்த விழாவில் கலந்து கொண்டு, சென்னை நகருக்கு உடனே தெலுங்கு கங்கை கால்வாய்மூலம் தண்ணீர் திறந்து விடும்படி ராஜசேகர ரெட்டிக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
இதையடுத்துப் பேசயி ராஜசேகர ரெட்டி கூறியதாவது:-
ஆந்திராவில் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதியைத் தந்து, திட்டத்தை விரைவாகநிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கு நன்றி. திமுக தலைவர் கருணாநிதி,டி.ஆர். பாலு மற்றும் திமுகவுக்கு மட்டும் தலைவர் அல்ல. கருணாநிதி எனக்கும் தலைவர் தான்.
அவரது கடும் உழைப்பால்தான் இன்று மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் தெலுங்கு கங்கை கால்வாய் திட்டத்தின் மூலம் சென்னை நகருக்கு கிருஷ்ணா நீர்போய் சேரும். இத் தகவலை கருணாநிதியிடம் தெரிவிக்கும்படி டி.ஆர். பாலுவை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஜெ. ஹைதராபாத் பயணம்:
கிருஷ்ணா நீர் தர ராஜசேகர ரெட்டி உறுதி கூறியுள்ள நிலையில், இதே கோரிக்கை தொடர்பாக அவரை சந்திக்கஜெயலலிதா நாளை ஹைதராபாத் செல்கிறார்.
நாளை மறுநாள் ராஜசேகர ரெட்டியை சந்தித்து கிருஷ்ணா நீரை விடுவிப்பது தொடர்பாக கோரிக்கை விடுக்கிறார்.
நக்ஸலைட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ராஜசேகர ரெட்டிமுன்வந்ததை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார். அதன்பின் ஜெயலலிதா ஹைதராபாத் செல்வதைத் தவிர்த்தேவந்தார். அங்கு அவருக்கு ஒரு திராட்சை தோட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்டிக்கு கருணாநிதி நன்றி:
இந் நிலையில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்படும் என பகிரங்கமாக அறிவித்தஉங்களுக்கு தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications