ஜெனீவா செல்லும் விடுதலைப் புலிகளின் குழு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அமைதிப் பேச்சுவார்த்தை குறித்தும், தங்களது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கவிடுதலைப் புலிகளின் உயர் மட்டக் குழு ஜெனீவா செல்கிறது.

புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், அரசியல் சட்டநிபுணர்களான ருத்ரகுமரன், சொர்ண ராஜா, சிவா பசுபதி மற்றும் ராமசாமி ஆகியோர் இக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.

இந்தக் குழு வரும் அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஜெனீவாவில் கூடி விவாதிக்கிறது.

தடைப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் சர்வதேசநிர்பந்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழ் வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு:

இந் நிலையில் மட்டக்களப்புக்கு அருகே உள்ள கிரன் என்ற இடத்தில் கனபதிபிள்ளை விவேகானந்தராசா (19)என்ற தமிழ் இளைஞர் மீதும் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடந்தது. இவரது வீட்டுக்கு வந்த ஒரு கும்பல் அவரைவெளியில் அழைத்துச் சுட்டுள்ளது. அதில் அவர் படுகாயமடைந்தார்.

அம்பாறையில் 2 சிங்களர்கள் கொலை:

இதற்கிடையே அம்பாறை மாவட்ட தீகவாவி என்ற இடத்தில் இரு சிங்கள இளைஞர்கள் அடையாளம் தெரியாதசிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விஜயதிலக (34), குலரத்தின (28) ஆகியோரின் உடல்கள் முள்ளிக்குளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.இவர்களை இலங்கை ஊர்க் காவல் படையினர் சுட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+