தொடர் மழையால் குறுவை விவசாயிகள் கவலை
தஞ்சாவூர்:
மழையே இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியாமல் சோகத்தில் தவித்து வந்த காவிரிப் பாசனப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு பெய்து வரும் தொடர் மழையால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை தவறியதாலும், கர்நாடகம் உரிய நீரைக் காவிரியிலிருந்து விடுவிக்கமறுத்ததாலும், தமிழக காவிரி பாசனப் பகுதியில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த முறை கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும்,தமிழக காவிரிப் பாசனப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் விவசாயிகள் ஒருபக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், குறுவை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையில்மூழ்கியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் குறுவைபயிரிட்டுள்ளோம். அறுவடைக்கு பயிர்கள் தயாராகி உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் பயிர்கள்சேதமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்கள்.
மொத்தம் 50,000 ஹெக்டேர்களில் குறுவை பயிரிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 24,136 ஹெக்டேர்கள்,திருவாரூரில் 9,261 ஹெக்டேர்கள், நாகப்பட்டனம் 21,200 ஹெக்டேர்களில் குறுவை பயிரிடப்பட்டுள்ளது.
இவர்களில் நாகப்பட்டனம் மாவட்ட விவசாயிகள் அறுவடையை ஆரம்பித்து முடித்து விட்டனர். மாட்டிக்கொண்டிருப்பது தஞ்சை, திருவாரூர் பகுதி விவசாயிகள்தான்.
இந்தப் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் மையங்கள் உடனடியாகத் திறந்தால் பாதிப்பிலிருந்து ஓரளவு மீளமுடியும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications