"பணமாகும்" ஜெயலட்சுமியின் கதை!

Subscribe to Oneindia Tamil

Mumtajஜெயலட்சுமியின் கதையைப் படமாக்கப் போவதாக திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியிருந்தாலும், அதிகஅளவில் பணம் கொடுக்கும் தயாரிப்பாளருக்கே இந்தக் கதையை படமாக்க அனுமதி தருவோம் எனஜெயலட்சுமியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

போலீஸ்காரர்களை கவிழ்த்த ஜெயலட்சுமியின் கதையை படமாக்கினால் பெருமளவில் பணம் பார்த்துவிடலாம்என்ற நப்பாசையில் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர் கோலிவுட்காரர்கள்.

நடிகைகள் மும்தாஜ், புவனேஸ்வரி (நல்ல சாய்ஸ்!) ஆகியோரைப் போட்டு ஜெயலட்சுமி கதையை படமாகஎடுக்கப் போவதாக தயாரிப்பாளர் கே.ராஜன் அறிவித்திருந்தார். இதற்காக ஜெயலட்சுமியை நேரில் சந்தித்துப்பேசவும் மதுரை செல்லவுள்ளார்.

Bhuwaneshwariஇந் நிலையில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே தனது கதையை படமாக எடுக்க அனுமதிகொடுக்குமாறு தனது வழக்கறிஞர் அழகர்சாமிக்கு ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அழகர்சாமி கூறுகையில், கே.ராஜன் தவிர சிம்ரனை வைத்து கோவில்பட்டி வீரலட்சுமி படத்தைஎடுத்த நிறுவனம் உள்பட நான்கு தயாரிப்பாளர்கள் இது விஷயமாக என்னை அணுகியுள்ளனர்.

இவர்களில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஜெயலட்சுமி கதையை படமாக எடுக்க அனுமதிகொடுப்போம் என்றார்.

தனது கதையை வைத்து பணம் சம்பாதிப்பதில் ஜெயலட்சுமியும் மிக ஆர்வமாக உள்ளதாகத் தெரிகிறது. யார் ரூ. 40லட்சம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு உடனடியாக படம் எடுக்க அனுமதி தருவார் ஜெயலட்சுமிஎன்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+