சோனியா காந்தியுடன் ராமதாஸ் சந்திப்பு
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார்.
சோனியாவின் இல்லத்தில் சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, மத்திய சுகாதாரம் மற்றும்குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி, ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு, பாமக எம்.பி.க்கள் ஏ.கே.மூர்த்தி, பேராசிரியர் ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழைச் செம்மொழியாக அறிவித்தது, சேது சமுத்திரத் திட்டம், சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்உள்பட பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தமைக்காக சோனியாவுக்கு ராமதாஸ் நன்றிதெரிவித்தார்.
சந்திப்பின்போது, தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தை ராமதாஸ்வலியுறுத்தினார். மேலும் பொதுவான அரசியல் சூழ்நிலை குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இவ்வாறுபாமக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எம்.பி.க்கள் குழு சந்திப்பு:
இதையடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் குழுவினரும் சோனியா காந்தியைச்சந்தித்து மனு கொடுத்தனர்.
குப்புசாமி (திமுக), கே.வி. தங்கபாலு (காங்.), பேராசிரியர் ராமதாஸ் (பாமக), டாக்டர் கிருஷ்ணன் (மதிமுக), பி.மோகன் (மார்க்சிஸ்ட்), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நலத் திட்டங்கள், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பணிகள்ஆகியவற்றின் பட்டியலை அவர்கள் சோனியாவிடம் அளித்தனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா உறுதி அளித்ததாக எம்.பி.க்கள் பின்னர்தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இதே போன்று அவர்கள் மனுகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications