கொலை சதி: 6 அல் உம்மா தொண்டர்கள் கைது
திருநெல்வேலி:
இரண்டு பேரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்ததாக 6 அல்-உம்மா தொண்டர்களை திருநெல்வேலிபோலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆறுமுகச் செட்டியார் என்பவரின் கொலை வழக்கில், அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த கிச்சன் புகாரி மற்றும் 12பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்தக் கொலை வழக்கில் இஸ்மாயில் மற்றும் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தங்களை வழக்கில் மாட்ட வைத்தது மேலப்பாளையத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் என்பவர்தான். எனவேஅவரை பழி வாங்காமல் விடாதே என்று நீதிமன்றத்தில் வைத்து முகம்மது இஸ்மாயிலிடம் கிச்சன் புகாரிகூறியுள்ளார்.
இதையடுத்து சிவசுப்ரமணியத்தைக் கொலை செய்ய, மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுல்தான், காஜா மொய்தீன்,கல்வத், மீரான் மைதீன், ஷாகுல் ஹமீது பாஷா ஆகியோருடன் நெல்லை வந்தார் முகம்மது இஸ்மாயில்.
இந்தத் தகவலை உளவுப் பிரிவினர் கண்டறிந்து திருநெல்வேலி போலீஸாரை உஷார்படுத்தினர்.
இதையடுத்து போலீஸார் தீவிர வேட்டை ஆறு பைரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், சிவசுப்ரமணியத்துடன் சேர்த்து இன்னொருவரையும் கொலை செய்ய இவர்கள்திட்டமிட்டிருந்தாகவும் தெரிய வந்ததுள்ளது.
அல்-உம்மாவைச் சேர்ந்த இமாம் அலியின் நினைவு தினமான செப்டம்பர் 28ம் தேதி இக் கொலைகளைச் செய்யஇஸ்மாயில் கும்பல் திட்டமிட்டிருந்தாகவும் போலீசார் கூறுகின்றனர்.
ஆனால் அன்று போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக இருந்ததால் திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாமல்போய்விட்டதாகத் தெரிகிறது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications