மலேசியா: தப்பிய வந்த புதுக்கோட்டை பெண்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண்ணை மலேசியாவில் விபச்சார விடுதியில் விற்க முயற்சி நடந்துள்ளது. அவர்மலேசியாவில் இருந்து தப்பி வந்து போலீசில் புகார் கொடுத்ததையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை திருவப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விதவைப் பெண் தையல்நாயகி (32). இவர்திருவப்பூர் கோவில் அருகே தேங்காய், பழம், பூ விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்திருமயத்தைச் சேர்ந்த மணி என்பவர் தையல்நாயகியிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டியுள்ளார்.
இதை நம்பிய தையல்நாயகியை கடந்த மே மாதம் 30ம் தேதி, சென்னையைச் சேர்ந்த தர்மன் என்பவரிடம்அறிமுகப்படுத்தியுள்ளார் மணி.
அப்போது, மலேசியாவில் தனக்கு வேண்டிய ஒருவரது வீட்டில் வீட்டு வேலை பார்க்க தையல் நாயகியைஅழைத்துச் செல்வதாகக் கூறிய தர்மன், அங்கு சென்ற பின் சில மாதங்களில் வேறு ஒரு நல்ல வேலை வாங்கித்தருவதாகவும் உறுதியளித்தார்.
டிக்கெட், விசா செலவுக்கு என்று கூறி முன் பணமாக ரூ. 25,000 வாங்கியுள்ளார். அடுத்த மாதம் மீண்டும்தையல்நாயகியை தொடர்பு கொண்ட தர்மன், இன்னும் ரூ. 53,000 தந்தால் உடனே மலேசியா கிளம்பலாம் என்றுகூற, அதை நம்பிய தையல் நாயகி தனது சொத்துக்களை விற்றுவிட்டு அவர் கேட்ட பணத்துடன் சென்னை சென்றுதர்மனை சந்தித்துள்ளார்.
அங்கு ஒரு லாட்ஜில் தங்கியிருந்த தர்மன், விசா கிடைப்பதற்கு சில நாட்கள் ஆகும் என்று கூறி தையல்நாயகியைதன்னுடன் தங்க வைத்துள்ளார். அப்போது தையல்நாயகியை பலமுறை தர்மன் கற்பழித்துள்ளார். அதன் பின்னர்தையல்நாயகியை அழைத்துக்கொண்டு மலேசியா சென்றுள்ளார்.
அங்கு குணசேகரன் என்பவரது வீட்டில் வேலைக்கு சேர்க்கப்பட்டார் தையல்நாயகி. அப்போது குணசேகரனும்தையல் நாயகியை கற்பழிக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால் அங்கிருந்து தப்பி சென்ற தையல்நாயகிஅங்குள்ள தனது ஊர்க்காரர் ஒருவரிடம் சரணடைந்துள்ளார்.
பின்னர் அவரது உதவியுடன் சில நாட்களுக்கு முன் மீண்டும் புதுக்கோட்டைக்கே திரும்பிய தையல்நாயகி,புதுக்கோட்டை டவுன் போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மணி, தர்மன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம்நடத்தப்பட்ட விசாரணையில் தையல் நாயகியை குணசேகரன் மலேசியாவில் விபசார விடுதியில் விற்கதிட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications