கூடங்குளம்: ஊழியர் தேர்வுக்கு நீதிமன்றம் தடை
மதுரை:
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு கடை நிலை ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கு மதுரை உயர் நீதிமன்றக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கூடங்குளம் நிலப் பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பின் செயலாளரான ராஜாராம் என்பவர் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்களது கவுன்சிலைச் சேர்ந்த உறுப்பினர்கள், கூடங்குளம்அனு மின் நிலையம் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை வழங்கியுள்ளனர்.
அரசு நிர்ணயித்த மிகக் குறைந்த விலைக்கு இந்த நிலங்களை நில உரிமையாளர்கள் கொடுத்துள்ளனர். நிலங்களைக்கொடுத்தவர்களுக்கு, கூடங்குளம் அணு மின் நிலைய வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என அரசுதெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது கடை நிலை வேலைகளுக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை கூடங்குளம் அணு மின் நிலையநிர்வாகம் தேர்வு செய்து வருகிறது. இது சட்டவிரோதமான செயல்.
தகுதி வாய்ந்த நில உரிமையாளர்களுக்கே கடை நிலை வேலையில் முன்னுரிமை கொடுத்து சேர்க்க வேண்டும்என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கடை நிலை ஊழியர் தேர்வுக்குஇடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications