For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாவை கொண்டாட வேண்டும்: தேவாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Devaram as STF chief in search operationசந்தனக் கடத்தல் வீரப்பனை என்னால் கொல்ல முடியவில்லையே என்ற ஏமாற்றம் எனக்கு இல்லை. யார்கொன்றால் என்ன, வீரப்பன் இப்போது இல்லை என்பது சந்தோஷமாக இருக்கிறது என்று முன்னாள் தமிழகஅதிரடிப்படைத் தலைவரும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான வால்டேர் தேவாரம் கூறியுள்ளார்.

வீரப்பனைப் பிடித்தே தீருவேன் என்று சபதம் போட்டு வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டவர் வால்டேர் தேவாரம்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் வீரப்பனைப் பிடிக்க முடியவில்லை.

இந் நிலையில் தனது சிஷ்யரான விஜயக்குமார் வீரப்பனையும், அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்தியிருப்பதுகுறித்து தேவாரம் கூறுகையில்,

இதில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. வீரப்பனுக்கு ஏற்பட்ட முடிவை அறிந்து நான் மிகவும் சந்தோஷத்துடன்இருக்கிறேன், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா அதிரடிப்படைக்குக் கொடுத்த ஆக்கம், ஊக்கம், விஜயக்குமாரின் சிறந்த தலைமைஆகியவைதான் வீரப்பன் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவியுள்ளது.

யாருக்கு பாராட்டு கிடைக்கிறது என்பது முக்கியமல்ல. அனைவரும் சேர்ந்து இந்த சந்தோஷச் செய்தியைக்கொண்டாட வேண்டும்.

மனித உரிமை மீறல் என்ற பெயரில் வீரப்பன் சாவுக்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது. வீரப்பன் மற்றும்அவனைச் சேர்ந்த கும்பலால் அதிரடிப்படையினர் தாக்கப்பட்டபோதும், உயிரிழந்தபோதும் இந்த மனித உரிமைக்கோஷங்கள் எங்கே போயிருந்தன?

மனிதர்கள் செய்யும் காரியத்தையா வீரப்பன் செய்து கொண்டிருந்தான்? அவனுக்கும் மனித உரிமைக்கும் என்னசம்பந்தம் உள்ளது என்று ஆவேசமாக கேட்டார் தேவாரம்.

கேரளத்தைச் சேர்ந்த தேவராத்தை நேற்று முதல் மலையாள மொழி டிவி சானல்கள் மொய்த்துக் கொண்டுள்ளன.தமிழில் திக்கித் திணறி பேசினாலும் அழகிய மலையாளத்தில் பேட்டிகள் கொடுத்து ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்தேவாரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X