சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 60 பேர் பலி?
பெய்ஜிங்:
சீனாவில் நிலக்கரி சுரங்கத்துக்குள் ஏற்பட்ட மிக பயங்கர விபத்தில் 60 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும்சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 88 பேரையும் மீட்பது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் நிலவுகிறது.
சுரங்கத்துக்குள் வாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சின்மி என்ற இடத்தில் ஷெங்மெய் நிலக்கரி சுரங்கத்தில் இந்தியநேரப்படி இன்று காலை 8.17 மணிக்கு இந்த காஸ் சிலிண்டர் வெடிப்பு ஏற்ப்பட்டது. இதில் 60 பேர் உடனடியாகஉயிரிழந்தனர்.
இந்த வெடி விபத்தில் சுரங்கத்திற்குள் நிலச்சரி ஏற்பட்டு பாதைகள் மூடப்பட்டுவிட்டதால், சுமார் 88 பேர்உள்ளேயே சிக்கியுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது சுரங்கத்துக்குள் சுமார் 500 பேர் இருந்தனர். சீனாவில் நிலக்கரி சுரங்களில் அடிக்கடி விபத்துநடப்பதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பலியாவதும் வழக்கமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications