மக்கள் வெள்ளத்தில் திணறும் தி.நகர்; போலீஸ் தீவிர கண்காணிப்பு
சென்னை:
தீபாவளி, ரம்ஜான் என பண்டிகைகள் நெருங்கி வருவதால், சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு மக்கள்கூட்டத்தில் சிக்கித் திணறி வருகிறது.
தலைநகர் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக தியாகராய நகர் எனப்படும் தி.நகர் விளங்கி வருகிறது.தி.நகரின் தெற்கு உஸ்மான் சாலையில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், மற்ற கடைகள் என கடைகளுக்குப்பஞ்சமே இல்லை. இதனால் இந்த சாலையில் எப்போதுமே திருவிழாக் கூட்டம்தான்.
இப்போது தீபாவளி வேறு வந்து விட்டதால், இங்கு நடக்கவே இடம் இல்லை எனும் அளவுக்கு மக்கள் கூட்டம்அலைமோதுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் மக்கள் நடக்கவும், வாகனங்கள்போகவும் போலீஸார் பாதை வகுத்துக் கொடுத்துள்ளனர்.
இதேபோல, தி.நகரின் முக்கிய வீதியான ரங்கநாதன் தெருவும் மக்கள் கூட்டத்தால் திணறி வருகிறது. தமிழகத்தின்மிகப் புகழ் பெற்ற நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ், முக்கிய ஜவுளிக் கடையான ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்உள்ளிட்ட பல வர்த்தக நிறுவனங்கள் ரங்கநாதன் தெருவில் உள்ளதால் தினசரி லட்சக்கணக்கான மக்கள் இந்ததெருவுக்கு வந்து செல்கின்றனர்.
தீபாவளியையொட்டி ரங்கநாதன் தெருவில் சிறப்புப் பாதுகாப்புக்கு போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்தத்தெருவைக் கண்காணிக்க 8 ரகசியக் கேமராக்கள் ஆங்காங்கு பொருத்தப்பட்டுள்ளன. 10 போலீஸ் கண்காணிப்புக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
200 பெண் போலீஸார் சாதாரண உடையில் உலவி வருகின்றனர். பெண்களை டீஸ் செய்யும் இளசுகளை பிடிப்பதுஇவர்களது வேலை.
ரங்கநாதன் தெருவில் மட்டுமல்லாது முக்கியப் பகுதியான பாரீஸ் கார்னர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும்போலீஸ் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாரீஸ் கார்னர் பகுதியில் 7 கோபுரங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
அடாது மழை பெய்து வந்தாலும், மக்கள் கூட்டம் விடாது படையெடுப்பதால் தி.நகர் திணறி வருகிறது.












Click it and Unblock the Notifications