தொடர் மழையால் பட்டாசு தயாரிப்பு மந்தம்
சிவகாசி:
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக "குட்டி ஜப்பான்" சிவகாசியில் இம்றை பட்டாசு தயாரிப்பு, குறிப்பாக கம்பி மத்தாப்புதயாரிப்பு படு மந்தமாக உள்ளது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந் நிலையில் கடந்த ஆண்டைப் போல இந்த முறை பட்டாசு விற்பனை இன்னும்சூடுபிடிக்கவில்லை. காரணம், தயாரிப்பு படு மந்தமாக இருப்பதுதான்.
பட்டாசு தயாரிப்புக்கு மூலப் பொருட்களுக்கு அடுத்தபடியாக முக்கியமாக தேவைப்படுவது வெயில். நல்ல வெயில்இருந்தால்தான் கம்பி மத்தாப்பு, புஸ்வானம் போன்றவற்றை காய வைத்து பேக் செய்ய முடியும்.
ஆனால் இந்த முறை தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பட்டாசுகளின் தாயகமான சிவகாசியில் தயாரிப்பு மிகவும்பாதிக்கப்பட்டுள்ளது. கம்பி மத்தாப்புகளை காய வைக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மற்ற வகைப் பட்டாசுகளை ஓரளவுக்கு தயாரித்து விட்டதால் அவை மட்டும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கம்பிமத்தாப்பு, புஸ்வானம் போன்ற சிறிய ரக பட்டாசுகள் இன்னும் முழுமையான அளவில் தயாராகவில்லை.
இதனால் இந்த தீபாவளிக்கு இந்த வகை பட்டாசுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.இதற்கிடையே, சென்னைநகரில் பட்டாசுக் கடைகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. இருப்பினும் விற்பனை சூடு பிடிக்கவில்லை.
கடந்த முறையைப் போல இந்த முறையும் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளைவிதித்துள்ளது. இந்த முறை சாலையோரக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சென்னை நகரில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகள் வெடித்தால் கைது செய்யப்படுவார்கள் என்றுமாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளிப்பண்டிகையையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜவுளிக் கடைகள், மருத்துவமனைகள், குடிசைப் பகுதிகள் ஆகியவற்றுக்கு அருகே பட்டாசுகள் வெடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்போர் கைது செய்யப்படுவர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பாரிமுனை, பாண்டிபஜார், தி.நகர், புரசைவாக்கம் உள்பட 5 இடங்களில்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
14 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 221 இடங்களில் சிறப்பு காவல் மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications