குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற பெண் கைது
ஈரோடு:
காவிரி ஆற்றில் குழந்தையை வீசி எறிந்து கொன்று விட்டு, இன்னொரு குழந்தையுடன் ஆற்றில் குதித்துத்தற்கொலைக்கு முயன்ற பெண்ணை சாலையில் சென்ற பொதுமக்கள் காப்பாற்றி போலீஸில் ஒப்படைத்தனர்.
ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் இடத்தில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின்குறுக்கே உள்ள சாலைப் பாலத்தில் வழக்கம்போல வாகனப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது.
இந்த சமயத்தில் திடீரென ஒரு பெண் ஆற்றில் தனது குழந்தையை வீசி எறிந்தார். கையில் இருந்த இன்னொருகுழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஏறி ஆற்றில் குதிக்க முயற்சித்தார்.
இதைப் பார்த்த, பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அந்தப் பெண்ணைத் தடுத்துநிறுத்திக் காப்பாற்றினர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. தீயணைப்புப் படையினரும் விரைந்துவந்தனர்.
ஆற்றில் வீசப்பட்ட குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால் குழந்தையின் சடலத்தைத்தான் அவர்களால் எடுக்கமுடிந்தது. போலீஸ் நிலையத்தில் வைத்து அந்தப் பெண்ணிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையின்போது,அவரது பெயர் சுசீலா என்றும் ஈரோட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
கணவர் வேலைக்குப் போகாமல் தினசரி அடித்துத் துன்புறுத்தியதாலும், வறுமை காரணமாகவும் இந்த முடிவைஎடுத்ததாக அவர் தெரிவித்தார். அந்தப் பெண் மீது குழந்தையைக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications
