கொலை குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பங்களாவில் பதுங்கியிருந்த கொலைக் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் சிவகாசிபோலீஸார். போலீஸார் மற்றும் கொலைக் குற்றவாளிகள், அவர்களுக்கு அடையாளம் கொடுத்தவர்ஆகியோருக்கிடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசி நகராட்சி உறுப்பினராக இருந்து வந்த பாஸ்கர் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இவர்அதிமுகவைச் சேர்ந்தவர். இவரைக் கொன்ற குற்றவாளிகளில் 2 பேர் நாகர்கோவில் அருகே ஒரு பங்களாவில்பதுங்கியிருப்பதாக சிவகாசி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிவகாசி போலீஸார் இன்று அதிகாலை நாகர்கோவில் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பங்களாவீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டிற்குள் இருப்பவர்களை சரணடையுமாறு கூறினர்.
ஆனால் வீட்டின் உரிமையாளரான வளவன் என்பவர் போலீஸாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்து அவர்களை குத்தமுயன்றார். இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் வளவன் காயமடைந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இடையே, வீட்டிற்குள் இருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களையும்போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கருத்தப்பாண்டியன் என்பவர் மட்டும் சிக்கினார், இன்னொருவர் ஓடிவிட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வளவன், எதிர் தாக்குதலில் காயமடைந்த 3 போலீஸார் ஆகியோர் நாகர்கோவில்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலையில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications