தர்மபுரி ஆர்.டி.ஓவிடம் வீரப்பன் தங்கை வாக்குமூலம்
தர்மபுரி:
வீரப்பன் கொலை தொடர்பாக அவனது தங்கை முனியம்மாள் தர்மபுரி ஆர்.டி.ஓவிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
வீரப்பன் கும்பல் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ. பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிஉள்ளிட்ட பொதுமக்கள் 9 பேர் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
4-வது நாள் விசாரணைக்கு வீரப்பனின் தங்கை முனியம்மாள், அவரது மகன் முருகேசன் வீரப்பனின் அண்ணன் மாதையனின் மனைவி மாரியம்மாள்,முத்துலட்சுயின் அண்ணன் செங்கோடனின் மனைவி மல்லிகா, அவரது தம்பி குமார் ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது முனியம்மாள் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் விஜயக்குமாரும்நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முத்துலட்சுமி பேட்டி:
இதற்கிடையே வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
என் மீது தொடரப்பட்டுள்ள கொலை வழக்கு, தடா வழக்கு, கணவரிடம் இருந்து பணம் பெற்றது போன்ற வழக்குகளை தமிழக, கர்நாடக அரசுகள்வாபஸ் பெற வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஒரு பெண் என்ற அடிப்படையில் அவர் என் மீதுள்ள வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications