போலீசாருக்கு கருணாநிதி பாராட்டு
சென்னை :
சங்கரராமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியான சங்கராச்சாரியாரைக் கைது செய்த போலீசாரின்நேர்மையான செயலைப் பாராட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முன்னதாக முக்கிய குற்றவாளியை (சங்கராச்சாரியார்) போலீசார் கைது செய்யாமல் வழக்கை திசை திருப்பமுயல்வதாக கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
திசை திருப்பல்:
இந் நிலையில் நேற்று கருணாநிதி திடீரென்று ஒரு அறிக்கை விட்டார். அதில், சங்கரராமனைக் கொன்ற உண்மைக்குற்றவாளி யார் என்பது மக்களுக்கும் தெரியும், அரசுக்கும் தெரியும்.
இவர்கள் எத்தனை காலம்தான் போலீஸ் பாதுகாப்பில் சுதந்திரமாக நடமாடப் போகிறார்களோ என்றுஅறிக்கையில் அவர் கேட்டிருந்தார். மேலும் உண்மைக் குற்றவாளியைக் கைது செய்யாவிட்டால் நாளை(சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக ஈடுபடும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கும் திமுக எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.மேலும் ஆளுநர் பர்னாலாவிடமும் இந்தக் கொலை தொடர்பாக போலீஸ் மீது புகார் தரவும் திமுக தயாராகிவந்தது.
இந்தப் பின்னணியில்தான் ஜெயேந்திரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கங்கையே பாவப்பட்டால்...
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி:
சங்கரராமன் கொலை வழக்கில் இப்போது தான் உண்மைக் குற்றவாளியை (சங்கராச்சாரியார்) கைது செய்துள்ளனர்போலீசார். ஒரு பெண் புனிதம் இழந்தால் கங்கையில் போய் பாவத்தைக் கழுவலாம் என்பார்கள். அந்த கங்கையேபாவப்பட்டால் எங்கே போய் பாவத்தைக் கழுவுவது?.
அதிமுகவின் தலைமைக்கு இந்த சாமியார் நெருக்கமானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்படிஇருந்தும் அவரைக் கைது செய்ததை பாராட்டுகிறேன்.
கைதில் காட்டிய அதே நேர்மையை வழக்கை நடத்துவதிலும் காட்ட வேண்டும். யாருக்கும் பணியாமல் வழக்குவிசாரணையை போலீசார் நேர்மையாக நடத்துவார்கள் என்று நம்புகிறேன். சங்கராச்சாரியார் ஒரு பவர் சென்டர்.மடத்தை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தியவர். இதனால் யார் நெருக்குதல் தந்தாலும் நேர்மையான வழக்குவிசாரணை நடக்க வேண்டும்.
அதே போல மோசடிப் பேர்வழிகள் எல்லாம் இனிமேல் சாமியார்கள் ஆகாமல் தடுக்க சட்டம் கொண்டு வரப்படவேண்டும். பக்தியின் பெயரால், கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் கும்பல்கள் மடங்கள்நடத்தவோ, சன்னியாசம் பெறவோ தடை விதிக்க வேண்டும்.
முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் தான் இப்படிப்பட்ட சட்டம் கொண்டு முன் வருவார்கள்.
இப்போது கைதான ஜெயந்திர சரஸ்வதி கடந்த 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி திடீரென மடத்தை விட்டுகாணாமல் போய்விட்டார். சாமியார்களின் கையில் எப்போதும் இருக்க வேண்டிய தண்டத்தை (புனித கோல்)மடத்திலேயே போட்டுவிட்டு ஓடினார்.
இவரை கர்நாடகத்தில் தலைக்காவிரி அருகே போலீசார் இவரைக் கண்டுபிடித்தனர். மீண்டும் இவரை மடத்துக்குஅழைத்து வரும் வேலையை ஆர்.வெங்கட்ராமன் போன்ற பெரியவர்கள் செய்தார்கள்.
காஞ்சி மடத்தின் பக்தர்கள் எல்லோரும் நிச்சயம் இன்று பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதுமட்டும் நிச்சயம். சுய மரியாதை இயக்கத்தில் இருந்து வந்த என்னைப் போன்றவர்களின் பேச்சைக் கேட்காமல்,ஜெயேந்திரர் போன்றவர்களை நம்பினார்கள். இதனால், அந்த பக்தகோடிகளின் சுயமரியாதையே இன்றுபறிபோய்விட்டது.
உண்மைக் குற்றவாளி கைது செய்யப்பட்டதால், சங்கரராமன் கொலை தொடர்பாக நாங்கள் நடத்தயிருந்தபோராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.
சன்னியாசிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு உதாரணம் தான்இந்தக் கொலைச் சம்பவம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications