டாஸ்மார்க் உற்சாக தீபாவளி !
சென்னை:
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தில் மது வியாபாரம் படு சுறுசுறுப்பாக இருந்தது.
தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு மது அருந்தி விட்டு நண்பர்களுடன் உற்சாகமாக சும்மாகாச்சுக்கும் பைக்கிலும் சைக்கிளிலும்கார்களிலும் நடந்தும் ஊரை வலம் வருவது தமிழகத்தில் அதிகரித்துவிட்டது.
தினமும் குடிக்கும் குடிமகன்கள் கூட தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு இரண்டு ரவுண்டு அதிகமாக அடிக்கின்றனர்.
இந்த உற்சாகப் பிரியர்களின் புண்ணியத்தால் இந்த ஆண்டு மது விற்பனை படு அமோகமாக நடந்துள்ளது. டாஸ்மார்க்கடைகளில் கூட்டம் அலைமோதியதால், அரசின் கல்லாப் பெட்டி நிரம்பி வழிந்துள்ளது.
வழக்கமாக கொஞ்ச நேர வியாபாரம், பெரும்பாலான நேரம் ஈ ஓட்டுதல் என்று பொழுதைக் கழிக்கும் டாஸ்மார்க் ஊழியர்கள்தீபாவளியின் முந்தைய தினமும் தீபாவளியன்றும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமஸ் திணறிவிட்டனர்.
பெட்டி பெட்டியாக சரக்குகள் வந்திறங்கினாலும் கூட அவை எல்லாம் இமைப் பொழுதில் விற்றுத் தீர்ந்துவிட்டன.
ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 35,000 விற்பனையாகும் கடைகளில் அன்று மட்டும் ரூ. 85,000 வரை விற்பனை இருந்தது. அரசுசார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு இது தலை தீபாவளி என்பது குறிப்பிடத்தக்கது.
பல குடிமகன்கள், விற்பனையாளர்களான பட்டாதாரி வாலிபர்களின் கையில் டிப்ஸ்களை அள்ளிக் கொடுத்து சென்றதையும்பார்க்க முடிந்தது. இந்த டிப்ஸ்கள் மற்றும் அரசு கொடுத்த 8.33 சதவீத போனஸுடன் தீபாவளியை கொண்டாடினர் இந்தடாஸ்மாக் பட்டதாரி ஊழியர்கள்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications