சங்கராச்சாரியாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Jayandrarகைது செய்யப்பட்ட சங்கராச்சாரியாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

சங்கராச்சாரியாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி தமிழக காவல்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதுஇன்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

(சங்கராச்சாரியார் இப்போது நீதிமன்றக் காவலில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தாலும் நீதிமன்றக்காவலில் இருப்பவரிடம் போலீசாரால் விசாரணை நடத்த முடியாது. அவரை போலீஸ் காவலுக்கு மாற்றினால் தான் சிறையில்வைத்து அவரிடம் போலீசாரால் விசாரணை நடத்த முடியும்)

இந் நிலையில் சங்கராச்சாரியாரின் சார்பில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதுநாளை விசாரணை நடக்கிறது. ஒருவேளை ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டால் அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போகும்என காவல்துறை கருதுகிறது.

இதனால், சங்கராச்சாரியாரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும், அவரை தங்களது காவலுக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என்றும் கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை இன்று நீதிபதி உத்தமராஜன் விசாரித்தார். அப்போது சங்கராச்சாரியாரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்தியாகராஜன், ஜெயேந்திரருக்கு எதிரான ஆதாரங்களை, சாட்சியங்களை முழுமையாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவிக்கவேண்டும்.

ஜெயேந்திரரை போலீஸ் காவலில் எடுக்க இந்த மனுவை தாக்கல் செய்ததை போலீஸ் எங்களிடம் தெரிவிக்கவே இல்லை. எனவேஇதற்கு பதில் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றார்.

இதற்கு அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெவித்தார். மிக முக்கியமான கொலை வழக்கில் ஆதாரங்களைஇப்போதே வெளியிட்டு விட்டால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். எனவே ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது. போலீஸ்காவலில் ஒருவரை எடுக்க மனு போடுவதையெல்லாம் எதிர் தரப்புக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.

தியாகராஜன் பேசுகையில், நாளை உயர் நீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு மீது விசாரணை நடக்கிறது. அதில்நாங்கள் விவாதம் செய்ய வசதியாக, சங்கராச்சாரியார் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆரின் நகலைத் தருமாறு போலீசாருக்குஉத்தரவிட வேண்டும் என்றார்.

இதற்கு ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். எப்.ஐ.ஆர். காப்பியைக் கோருவது சரியல்ல என்றார்.

இதையடுத்துப் பேசிய தியாகராஜன், சங்கராச்சாரியாரை மருத்துவமனையில் அனுமதிக்கவும், சிறையில் பூஜை செய்யவும்,அவரே சமைத்துச் சாப்பிடவும் அனுமதிக்க வேண்டும் என்றார். இதற்கும் அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உத்தமராஜன், காஞ்சி சங்கராச்சாரியாரை 18ம் தேதி (நாளை மறுநாள்) நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அது வரை இந்த வழக்கு விசாரணையையும் ஒத்தி வைத்தார்.

முன்னதாக நீதிமன்ற நடவடிக்கைகளைக் காண ஏராளமான நிருபர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும் உள்ளே புகுந்தனர்.இதனால் சிறிய நீதிமன்ற அறையில் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பத்திரிக்கையார்களை உடனே வெளியேற நீதிபதிஉத்தரவிட்டார்.

இதற்கிடையே, ஜெயேந்திரருக்கு எதிரான ஆதாரங்களை காவல்துறை வெளியிட வேண்டும் என்று கோரி காஞ்சி மடம் சார்பிலும்தனியாக ஒரு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையும் 18ம் தேதி நடைபெறும் என நீதிபதிஅறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+