தென் மாநில முதல்வர்கள் மாநாடு: ஜெ. புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதிலாகநிதியமைச்சர் பொன்னையன் கலந்து கொள்கிறார்.

10-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து மாநிலங்களின் கருத்தை அறிய தென்மாநிலமுதல்வர்கள் மாநாடு மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, கர்நாடக முதல்வர் தரம்சிங், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, புதுவைமுதல்வர் ரங்கசாமி, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், மத்திய திட்டத் துறை இணை அமைச்சர் ராஜசேகரன் மற்றும்தென்மாநிலங்களைச் சேர்ந்த நிதி, திட்டத் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய திட்டக் குழு முதன் முறையாக இதுபோன்ற மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசிலிருந்து மாநிலங்களுக்குக்கூடுதல் நிதி, வரி வசூலிப்பில் மாநிலங்களுக்குக் கூடுதல் பங்கு அளிப்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

மாலையில் அனைத்து தென் மாநில முதல்வர்களையும் அலுவாலியா தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

முதல்வர்களின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெ. கலந்து கொள்ளவில்லை:

இந்த மாநாட்டில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக லட்சுமி பிரானேஷ் கலந்து கொண்டார். சட்டசபைக்கூட்டத் தொடர் தொடங்கியிருப்பதால் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பெங்களூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தரம்சிங், மாநாட்டில் கலந்து கொள்ளும்படி ஜெயலலிதாவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெறவிருப்பது நினைவு கூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+