ஜெயலட்சுமிக்கு மருத்துவ சோதனை
மதுரை:
சிபிஐ கோரிக்கையை அடுத்து ஜெயலட்சுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப மதுரை தலைமை நீதித்துறை நடுவர்மன்றம் உத்தரவிட்டது.
காவல்துறை அதிகாரிகள் மீது ஜெயலட்சுமி கூறிய பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சிபிஐ சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் சிவாஜிதலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் ஜெயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று மதுரை தலைமை நீதித்துறை நடுவர்மன்றத்தில் சிபிஐ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றத்துக்கு ஜெயலட்சுமிவந்திருந்தார். மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிபதி பாண்டுரங்கன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications