ஜெவுக்கு பாஜக எம்எல்ஏ பாராட்டு
சென்னை:
ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் ஒருபக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டு மழையில் நனையவைத்தார் பாஜக எம்எல்ஏ அரசன்.
சட்டசபையில் அரசன் பேசுகையில், வீரப்பனை ஒழித்த முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குசிறப்பாக உள்ளது. இதற்காகவும் முதல்வரைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார்.
இது ஆளுங்கட்சியினருக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியது. அவர்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
அப்போது எழுந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், அரசைப் பாராட்டி பாஜக உறுப்பினர் பேசுவது ஆச்சரியமாகஉள்ளது. இதை அவரது கட்சித் தலைவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, தான் உணர்ந்ததை தனது தலைவர்களுக்கும் அரசன் எடுத்துக் கூறுவார் என்றார்.
இதனால் அவையில் சிரிப்பொலி பரவியது.
அமைச்சர்கள் மாற்றமும் புத்தகமும்...
தொடர்ந்து பேசிய அரசன், அமைச்சர்களைத் தான் இந்த அரசு அடிக்கடி மாற்றிவிடுகிறது. யார் எந்தத் துறைக்கு அமைச்சர் என்றேதெரியவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், அதற்குத் தான் பத்திரிக்கைகளைப் படிக்கணும் என்றபோது அவையில் சிரிப்பொலிகேட்டது.
அப்போது எழுந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பழனிச்சாமி, அமைச்சர்கள் மாற்றம் குறித்து அவ்வப்போது புத்தகம்போட்டால் நன்றாக இருக்கும் என்று பஞ்ச் வைத்தார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications