சிபிஐ விசாரிக்க கோரும் மனு 25ல் விசாரணை
டெல்லி:
சங்கராச்சாரியார் கைது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க. தாக்கல் செய்த மனு மீது வரும் நாளைமறுதினம் (25ம் தேதி) விசாரணை நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி பா.ஜ.கவின் சார்பில் மக்களவை எம்.பியான பி.பி.சிங்கால் உச்ச நீதிமன்றத்தில்பொது நல மனு தாக்கல் செய்தார். அதில்,
சங்கராச்சாரியார் விஷயத்தில் தமிழக போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர். அவரை கொலை வழக்கில் சிக்கவைக்க முயல்கின்றனர். இதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். மேலும் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டபோது உச்ச நீதிமன்றத்தின் விதிகளை போலீசார் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முழுமையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை சிபிஐ தான் செய்ய முடியும். தமிழகபோலீஸ் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் விசாரணை நேர்மையாக நடக்க வாய்ப்பே இல்லை.
சங்கராச்சாரியாருக்காக நாங்கள் வாதடவில்லை. இந்தக் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் பிடிபட வேண்டும்,வழக்கு நேர்மையாக நடக்க வேண்டும் என்று தான் கோருகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மனு மீதான விசாரணை வியாக்கிழமைநடக்கும் என்று இன்று அறிவித்தது.












Click it and Unblock the Notifications