ஜெயேந்திரர்: தற்கொலை செய்தவர் தலித் வாலிபர்
பல்லடம்:
| சங்கராச்சாரியார் கைதைக் கண்டித்து விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு இந்து முன்னணித் தொண்டர் தலித்சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
நேற்று பல்லடத்தில் பாஜக சார்பில் தர்ணா நடந்தபோது அங்கு வந்து, சங்கராச்சாரியாரை வாழ்த்தி கோஷமிட்ட சண்முகம் என்றவாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் பூச்சி மருந்து குடித்துவிட்டு தர்ணாவுக்கு வந்தது தெரியவந்தது. இந்த வாலிபரின் சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது: |
எங்கள் ஊரில் இந்து மதம் எப்படி தேய்ந்து கொண்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு இந்த கடிதம் மூலம் தெரிவிக்கவிரும்புகிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த 5 பேர் ஒரு அமைப்பில் சேர்ந்து கொண்டு பாலசுப்ரமணியம் தலைமையில் கிறிஸ்தவமதத்திற்கு மாறினர்.
![]() |
பிறகு அப்பாவி மக்களை பண ஆசை காட்டி கட்டாயப்படுத்தி 15 குடும்பங்களை இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்குமாற்றினர்.
அரசால் தலித் மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை பெற்றுத் தருவோம் என்றும், கிறிஸ்தவ மதத்தில் வரும் சலுகைகளையும்
இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியும் அரசுச் சலுகைகளைப் பெற இந்து மதம் என்றே சான்றிதழ் பெற்றுக் கொள்கின்றனர்.ஆனால் கிறிஸ்தவ மதப்படியே ஜெபம் செய்து, வீட்டு விசேஷங்களையும் நடத்தி, கிறிஸ்தவ பண்டிகைகளைக்கொண்டாடுகின்றனர்.
அரசு அதிகாரிகள் இதைக் கண்டுகொள்வதில்லை. கிருஸ்துவர்களாக மாறிய பின்னரும் அரசாங்கத்தில் தலித்களுக்கு தரப்படும்சலுகைகளை முழுமையாக பெற்றுக் கொள்கின்றனர்.
இந்நிலையில் மதம் மாறுபவர்களை, இந்து மதத்தின் பெருமைகளை விளக்கி மதம் மாறாமல் தடுத்து வந்தேன். இதனால்என்னையும் என் குடும்பத்தையும் ஒழிக்க சதித் திட்டம் தீட்டியுள்ளார்கள்.
ஒரு பெண்ணை வெட்ட முயன்றதாக என் மீது பொய்ப் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரிக்காமல் இரவோடு இரவாக என்னைஅழைத்துச் சென்று எப்.ஐ.ஆர். போட்டு கோவை சிறையில் அடைத்துவிட்டனர்.
ஒரு வாரம் கழித்து நான் ஜாமீனில் வெளிவந்தேன். ஒரு மாதமாக காவல்நிலையம் சென்று தினமும் கையெழுத்து போட்டுவருகிறேன். மேலும் நான் வேலை செய்யும் இடத்திற்கு சென்று என்னை வேலையில் சேர்க்க வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
அதன் பின்பு வேலையில்லாமல் வீட்டில் இருந்தேன். எந்த தவறும் செய்யாமல் தற்போது எட்டு நாளுக்கு ஒரு முறை போலீஸ்தலைமை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்து போட்டு வருகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
-
Gold price: பழையபடி மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. இன்று குறைய சான்ஸ் இருக்கா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?













Click it and Unblock the Notifications