ஜெயேந்திரர் விடுதலைக்காக லட்ச தீப வழிபாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயேந்திரர் விடுதலை ஆகும் வரை சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் கோவிலில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடுநடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் சத்யா என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளிக்கும், கார்த்திகைக்கும் இடைப்பட்டநாட்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்தது என்பது மறைந்த மகாப் பெரியவன் அருள் வாக்கு.
தற்போது ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு சோதனைக்குட்பட்டுள்ளார். இந்த நேரத்தில் அவரது விடுதலையை வேண்டியும்,ஆரோக்கியத்தை வேண்டியும், மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் உள்ள அலர்மேல் மங்கைத் தாயார் உடனுறைசீனிவாசப் பெருமாள் சன்னதியில் லட்ச தீபம் ஏற்றப்படும்.
இன்று தொடங்கி ஜெயேந்திரர் விடுதலை ஆகும் வரை லட்ச தீபம் ஏற்றப்பட்டு வழிபாடுகள் தொடரும் என்று அதில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications