ஜெயேந்திரர் மீது புதிய கொலை முயற்சி வழக்கு
வேலூர்:
| சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரைக் கொல்ல முயன்றதாக ஒரு வழக்கிலும் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கான கைது வாரண்டை வேலூர் சிறையில் இருக்கும் ஜெயேந்திரரிடம் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. சக்திவேல் நேரில் சென்றுகொடுத்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகஅறிவிக்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலைலயில் மடத்தின் பக்தர் ஒருவரைக் கொல்ல முயன்றதாக அவர் மீது புதிய வழக்குப் போடப்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். காஞ்சிபுரம் சங்கர மடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.மறைந்த பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தீவிர பக்தர். பின்னர் ஜெயேந்திரருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக மடத்துடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டார். |
இது தொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பூமிநாதன், லட்சுமன்ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்தத் தாக்குதல் சங்கராச்சாரியார் தூண்டுதலின் பெயரிலேயே நடந்ததாக போலீஸ்விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும் அப்போது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விட்டுவிட்டனர்.
இந் நிலையில் அடுத்த சில மாதங்களில் ஆட்டோ ஒன்று ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோதியது. இதில்ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் காயத்துடன் தப்பினர். இத் தாக்குதலிலும் சங்கர மடத்தின் பெயர் அடிபட்டது.
சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் சங்கர மடம் குறித்து மொட்டை கடிதங்கள் போடுவது ராதாகிருஷண்னன் தான் என்றுமுதலில் நினைத்த சங்கராச்சாரியார், அவரைக் கொல்ல அப்பு கோஷ்டிக்கு உத்தரவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
இதன் பின்னர் தான் அந்தக் கடிதங்கள் எழுதுவது சங்கரராமன் என்பது உறுதியானதால் அவரைக் கொல்ல சங்கராச்சாரியார்உத்தரவிட்டார் என்கின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட பின்பு, சட்டசபையில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தமுதல்வர் ஜெயலலிதா, அதில், போலீஸாரின் விசாரணையில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, வேலையாள் ஆகியோர்தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்குத் தொடர்பு உள்ளது தெரியவந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
இந் நிலையில் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது வாரண்ட் அவரிடம்கொடுக்கப்பட்டது. இதை வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உறுதிப்படுத்தினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் நீதிமன்றக் காவல் வரும் 26-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில்,ஜெயேந்திரருக்கு மீண்டும் கைது வாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் இந்த வழக்கிலும் புதிதாகக் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.
இதன் மூலம் ஜெயேந்திரர் மீதான பிடி இறுகியுள்ளது. ஜெயேந்திரர் மீது மேலும் ஒரு வழக்கைப் போடவும் அரசுத் தரப்பு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் கிடைத்தாலும்கூட அவர் வெளியே வருவது கடினமாகியுள்ளது.தற்போது 2வது வழக்கும் போடப்பட்டுள்ளதால் இதிலும் அவர் ஜாமீன் பெற்றாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்













Click it and Unblock the Notifications